Know the word TRUANT...

Word of the day is TRUANT...
Pronunciation
/ˈtru·ənt/

Function
The word TRUANT can be used as noun and adjective.

Meaning
TRUANT என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம் முதலாவதாக it refers to someone who is absent from school without permission அதாவது அனுமதியின்றி பள்ளிக்கு வராத ஒருவர் என்று அர்த்தம்.

அதாவது TRUANT என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் அனுமதியில்லாமல் தொடர்ந்து பள்ளிக்கு வராத ஒரு மாணவனை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த மாணவர்களின் பெற்றோர்களை பொருத்தவரையில் இவர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் இவர்கள் பள்ளிக்கு செல்வது போல் காட்சியளித்து பள்ளிக்கு செல்லாமல் பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பார்கள்.

பெரிய பெரிய நகரங்களில் நடைபெறும் கொலை, கொள்ளை போன்றவற்றில் TRUANT SCHOOL BOYS INVOLVED என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மேலும் It refers to a person who shirks his or her duty அதாவது தனது கடமையைத் தவிர்க்கும் ஒரு நபரையும் குறிப்பதற்காக இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படுகிறது.

அதாவது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு நபர் அவரது கடமைகளை தகுந்த காரணம் இல்லாமல் செய்யாமல் தவிர்க்கும் ஒரு நபரையும் குறிப்பதற்காக பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தங்களில் TRUANT என்ற இந்த வார்த்தையை தமிழில் ஒரு மாணவனை குறிக்க பயன்படுத்தும் பொழுது விடுப்பிசைவு பெறாத மாணவன் அல்லது விடுப்பிசைவு பெறாமல் பள்ளிக்கு வராத மாணவன் என்று பயன்படுத்த வேண்டும் கடமையைச் செய்யாத ஒரு நபரை குறிக்க பயன்படுத்தும் பொழுது வேலை கள்ளன் என்று பயன்படுத்த வேண்டும்.

In a sentence
A truant student will be a problem maker.
விடுப்பிசைவு பெறாமல் பள்ளிக்கு வராத ஒரு மாணவன் பிரச்சனையை உருவாக்குபவராக இருப்பார்.

A truant person will not get promotion.
கடமையைச் செய்யாத ஒரு நபருக்கு பதவி உயர்வு கிடைக்காது.

Practice it
எனவே நண்பர்களே! விடுப்பிசைவு பெறாத மாணவன் அல்லது கடமையைச் செய்யாத ஒரு நபர் அல்லது வேலை கள்ளன் என்ற இடங்களில் இந்த TRUANT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...