Know the word VERBOSE...
Word of the day is VERBOSE...
/vɚˈboʊs/
Function
The word VERBOSE is an adjective.
Meaning
using or containing more words than are necessary அதாவது தேவையானதை விட அளவுக்கு அதிகமான வார்த்தைகளை கொண்டிருத்தல் அல்லது பயன்படுத்துதல் என்று அர்த்தம்.
அதாவது வெட்டிப்பேச்சு வேதனையைத் தரும் என்று சொல்லுவாங்க.
அதாவது சில பேருக்கு பேசுவது என்றால் ரொம்ப பிடிக்கும் அதனால வாயில வருகின்ற எல்லாவற்றையும் பேசுவாங்க, தேவையானதுதான் பேசுறோமா அல்லது சரியானதுதான் பேசுறோமா என்று கொஞ்சம் கூட யோசித்து பார்க்க மாட்டாங்க.
சரியான பேச்சு என்று சொல்லப்படுவது எது தெரியுமா? யாராவது ஏதாவது கேட்டாங்க அப்படின்னா அதுக்கு பதில் "ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை" இருக்க வேண்டும் அவ்வளவுதான். அதை தாண்டி ஒரு வார்த்தை பேசினாலே அது பல வார்த்தைகளை பேச வழி வகுத்துவிடும். அது பிற்காலத்தில் வேதனையைத் தரும்.
சில பேர் பேசினால் பேசிக்கிட்டே இருப்பாங்க அவங்க என்ன பேசுறாங்கன்னு அவங்களுக்கும் தெரியாது அவங்க பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அடுத்தவங்களுக்கும் அதை சொல்ல தெரியாது அந்த அளவுக்கு எக்கச்சக்கமான வார்த்தைகளைப் பேசி இருப்பாங்க. அதுல எந்தவிதமான ஞானமும் வெளிப்பட்டு இருக்காது, எந்தவிதமான அறிவும் வெளிப்பட்டு இருக்காது அந்த மாதிரி இடத்துல தான் இந்த VERBOSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
தமிழில் அளவுக்கு அதிகமான பேச்சு அல்லது நீளமான பேச்சு என்ற அர்த்தத்தில் VERBOSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
His verbose speech about the project irritated others.
செயல்திட்டம் பற்றிய அவரது நீளமான பேச்சு மற்றவர்களுக்கு எரிச்சலூட்டியது.
Practice it
எனவே நண்பர்களே! அளவுக்கு அதிகமான பேச்சு அல்லது நீளமான பேச்சு என்ற இடத்தில் இந்த VERBOSE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக