Know the word WARY...

Word of the day is WARY...
Pronunciation
/ˈweə.ri/

Function
The word WARY is an adjective.

Meaning
not completely trusting or certain about something or someone அதாவது எதையாவதொன்றை அல்லது யாரையாவதொருவரை முழுமையாக நம்பாத என்று அர்த்தம்.

அதாவது ஒரு விஷயத்தை அல்லது ஒரு நபரை கவனத்துடன் கையாளுதல் என்ற அர்த்தத்தில் WARY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

அதாவது புதுசா ஒரு இடத்துக்கு போனோம் அப்படின்னா அந்த இடத்தில இருக்கிற குளம் குட்டைகளில் தனியாக குளிக்கப் போகக் கூடாதுன்னு சொல்லுவாங்க.
ஏன்னா அந்த குளத்துல அல்லது அந்த குட்டைல இருக்கிற பாறையோ அல்லது பள்ளமோ புதுசா போகிற நமக்குத் தெரியாது என்பதற்காகத்தான்.

அதுபோல முன்பின் தெரியாத ஒரு நபரிடம் பார்த்து கவனமாக பழக வேண்டும் என்று சொல்லுவாங்க ஏனென்றால் எந்த புற்றுல எந்த பாம்பு இருக்குது என்று நமக்கு தெரியாது என்பதற்காகத்தான்.

இவ்வாறாக எதையாவதொன்றை அல்லது யாரையாவதொருவரை முழுமையாக நம்பாமல் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் அணுகுகின்ற ஒரு இடத்தில் இந்த WARY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

தமிழில் எச்சரிக்கையாக என்ற அர்த்தத்தில் இந்த WARY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
It Is advised to be wary with the strangers.
அந்நியர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

If you are not wary enough, you will lose lot of money in the stock market.
நீங்கள் போதுமான எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், நீங்கள் பங்குச் சந்தையில் நிறைய பணத்தை இழக்க நேரிடும்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த WARY என்ற இந்த வார்த்தையை தமிழில் எச்சரிக்கையாக என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...