Know the WITHER or WITHER AWAY...

Word of the day is WITHER & WITHER AWAY...
Pronunciation
/ˈwɪð.ər/

Function
The word WITHER is a verb.

இந்த WITHER என்ற இந்த வார்த்தையை WITHER என்று தனியாகவும் பயன்படுத்தலாம் அல்லது WITHER AWAY என்று phrasal verb ஆகவும் பயன்படுத்தலாம் இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான்.

Meaning
இந்த WITHER அல்லது WITHER AWAY என்ற இந்த வார்த்தையை மூன்று அர்த்தத்தங்களில் பயன்படுத்தலாம்.

அதாவது to dry up or to lose vigor or to lose importance and slowly disappear என்று சொல்லலாம் அதாவது வாடி வறண்டு போகுதல் அல்லது வலிமையை இழத்தல் அல்லது முக்கியத்துவத்தை இழந்து மெதுவாக மறைந்துவிடுதல் என்று அர்த்தம்.

இவ்வாறாக இந்த WITHER என்ற இந்த வார்த்தையை மேற்கூறியவாறு மூன்று அர்த்தத்தங்களில் பயன்படுத்தலாம்.

முதல் அர்த்தத்தமாக to dry up என்று சொல்லும்போது செடிகள் மரங்கள் தண்ணீர் இல்லாமல் அதிக வெப்பத்தினால் வாடி வறண்டு போகுதல் எனுமிடத்தில் பயன்படுத்தலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தும் பொழுது கருகுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
The plants are withering due to lack of water.
தண்ணீர் இல்லாததால் செடிகள் கருகி வருகின்றன.

இரண்டாவது அர்த்தத்தமாக to lose vigor என்று சொல்லும்பொழுது வலிமை நிறைந்த ஒரு மனிதன் அவனது வலிமையை இழக்கும் பொழுது பயன்படுத்தலாம் அல்லது ஒரு மனிதன் அவனது  உடல் பாகத்தின் ஒரு பகுதியின் வலிமையை இழக்கும் பொழுது பயன்படுத்தலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தும் பொழுது வலிமையை இழத்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
After he underwent the operation, his right leg withered.
அவனுக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு, அவனது வலது கால் வலிமையை இழந்தது.

மூன்றாவது அர்த்தத்தமாக to lose importance and slowly disappear என்று சொல்லும்பொழுது ஒரு காலத்தில் ஒரு இடத்தில் முக்கியமாக கருதப்பட்ட ஒன்று அல்லது முக்கியமாக கருதப்படுகின்ற ஒன்று அதனது முக்கியத்துவத்தை இழந்து வரும் பொழுது அதனது முக்கியத்துவம் மெல்ல மறைந்து அது அந்த இடத்திலேயிருந்து மறைந்து விடும்.

எனவே இந்த அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தும் பொழுது மறைந்து விடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
If a country does not give any importance to farming, farming will slowly wither away.
ஒரு நாடு விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவிட்டால், விவசாயம் மெல்ல மறைந்து விடும்.

His hope on the progress started to wither away.
முன்னேற்றம் பற்றிய அவரது நம்பிக்கை மறைய தொடங்கியது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் கருகுதல் அல்லது வலிமையை இழத்தல் அல்லது மறைந்துவிடுதல் என்ற அர்த்தங்களில் இந்த WITHER & WITHER AWAY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...