Know the word ABIDE...

Word of the day is ABIDE...
Pronunciation
/əˈbaɪd/

Function
The word ABIDE is a verb.

Meaning
The word ABIDE means to be able to live with or put up with என்று சொல்லலாம் அதாவது வாழ முடிதல் அல்லது சகித்துக்கொள்ள முடிதல் என்று அர்த்தம்.

அதாவது ஒருவரால் ஒரு இடத்தில் வாழ முடிதல் அல்லது சகித்துக்கொள்ள முடிதல் என்று சொல்லும் பொழுது அதனுள் குறைந்தபட்சம் மூன்று விஷயங்களாவது அடங்கும்.  

முதலாவதாக அந்த இடத்தில் உள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அந்த சட்டதிட்டங்களை ஏற்றுக்கொண்டு வாழ்தல்.

இரண்டாவதாக அங்கு வாழும் மக்களின் நிறை குறைகளை ஏற்றுக்கொண்டு வாழ்தல்.

மூன்றாவதாக அந்த இடத்தில் இருக்கும் கலாச்சாரத்தின் நிறை குறைகளை ஏற்றுக்கொண்டு வாழ்தல் என்று மூன்று விஷயங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

இவ்வாறாக குறைந்தபட்சம் இந்த மூன்று விஷயங்களையாவது ஏற்றுக்கொண்டு அல்லது சகித்துக்கொண்டு ஒருவரால் ஒரு இடத்தில் சந்தோஷமாக நிம்மதியாக வாழுமுடியும் பொழுது அந்த இடத்திலே இந்த ABIDE என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

மேலும் இவ்வாறாக ஒருவரால் ஒரு இடத்தில் குறைந்தபட்சம் மேற்கூறிய மூன்று விஷயங்களை ஏற்றுக் கொண்டு அல்லது சகித்துக்கொண்டு வாழ முடியாமல் போகும் பொழுது அந்த இடத்திலே CAN'T ABIDE என்று எதிர்மறையாக பயன்படுத்தலாம் அதாவது வெறுத்தல் என்று அர்த்தமாகிவிடும்.

மேலும் இந்த வார்த்தையை சாதாரணமாக ஒருவர் அவரது வீட்டிலுள்ள பிரச்சினைகளை, நிறை குறைகளை ஏற்றுக்கொண்டு அல்லது சகித்துக்கொண்டு  வாழுமுடியும் பொழுதும்  பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் ABIDE என்ற இந்த வார்த்தையை வாழ்தல், வாசஞ்செய்தல் அல்லது சகித்துக் கொள்தல் அல்லது பொறுத்துக் கொள்தல் என்ற அர்த்தங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
She abided in the desert for two months.
அவள் இரண்டு மாதங்கள் பாலைவனத்தில் வாழ்ந்தாள்.

He can't abide lack of discipline.
ஒழுக்கமின்மையை அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. (அ)
ஒழுக்கமின்மையை அவரால் சகித்துக் கொள்ள முடியாது. (அ)
ஒழுக்கமின்மையை அவர் வெறுக்கிறார்.

Practice it
எனவே நண்பர்களே! வாழ்தல், வாசஞ்செய்தல் அல்லது சகித்துக் கொள்தல் அல்லது பொறுத்துக் கொள்தல் அப்படிங்ற இடத்தில இந்த ABIDE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...