Know the word ATROCITY...
Word of the day is ATROCITY...
/əˈtrɑː.sə.t̬i/
Function
The word ATROCITY is a noun.
Meaning
The word ATROCITY refers to an extremely cruel, violent, or shocking act என்று சொல்லலாம் அதாவது மிகவும் கொடூரமான, வன்முறை நிறைந்த அல்லது அதிர்ச்சியூட்டும் செயலை குறிக்கிறது என்று அர்த்தம்.
ATROCITY என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் ATROCITIES என்று பன்மையில்தான் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது ஒரு மனிதனின் நாடி, நரம்பு, எண்ணமெல்லாம் வன்முறையினாலும் கொடூரத்தனத்தினாலும் நிறைந்திருக்கும் பொழுது அந்த மனிதன் மிருகத்தனமாக செயல்பட ஆரம்பிப்பான். இவ்வாறாக மிருகத்தனமாக செயல்படும் பொழுது எல்லா வகையான மனிதத்தன்மையற்ற ஒழுக்கக்கேடான மூர்க்கத்தனமான செயல்களையும் செய்வான்.
பெரும்பாலும் இதுபோன்ற கொடூரமான மனிதத்தன்மையற்ற ஒழுக்கக்கேடான மூர்க்கத்தனமான செயல்கள் இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் பொழுது அல்லது இரண்டு இன மக்களிடையே கலவரம் வெடிக்கும் பொழுது அல்லது பலநாள் பகை கொண்ட இரண்டு மனிதர்களுக்கிடையே சண்டை ஏற்படும் பொழுது நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
எனவே இந்த ATROCITY என்ற இந்த வார்த்தையை தமிழில் கொடுமை அல்லது அக்கிரமம் அல்லது தீச்செயல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
In a sentence
She fell unconscious on seeing the war atrocities.
போர்க் கொடுமைகளைக் பார்த்து அவள் மயங்கி விழுந்தாள்.
They will be punished severely for the atrocities that they committed.
அவர்கள் செய்த அக்கிரமங்களுக்கு அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் கொடுமை அல்லது அக்கிரமம் அல்லது தீச்செயல் என்ற அர்த்தங்களில் இந்த ATROCITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக