Know the word COMMOTION...

Word of the day is COMMOTION...
Pronunciation
/kəˈməʊ.ʃən/

Function
The word COMMOTION is a noun.

Meaning
இந்த COMMOTION என்ற இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம் முதலாவதாக it refers to a state of confused and noisy disturbance என்று சொல்லலாம் அதாவது குழப்பத்தாலும் சத்தத்தாலும் ஏற்படும் தொந்தரவு நிலை என்று அர்த்தம்.

அதாவது அமைதியாக இருக்கும் ஒரு சூழ்நிலையை ஒருவரோ அல்லது இரண்டு மூன்று பேர் சேர்ந்தோ எதையாவதொன்றை குறித்து சத்தம் போட்டோ அல்லது கூச்சலிட்டோ  அல்லது வாக்குவாதம் செய்தோ அந்த அமைதியான சூழ்நிலையை கெடுக்கும் பொழுது அல்லது அந்த இடத்திலே இருக்கும் மற்ற மனிதர்களுக்கு தொந்தரவாக இருக்கும் பொழுது அந்த சூழ்நிலையை குறிக்க இந்த COMMOTION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் இந்த COMMOTION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தமிழில் கூச்சல் அல்லது சலசலப்பு என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக the word commotion refers to an out of control movement என்று சொல்லலாம் அதாவது ஒரு  கட்டுப்பாடற்ற இயக்கம் என்று அர்த்தம்.

அதாவது ஒரு கூட்டத்துல முன்னாடி செல்வதற்காக முந்தியடித்துக் கொண்டு அல்லது ஒருவர் மற்றொருவரை தள்ளிக் கொண்டு நகரும் பொழுது இந்த COMMOTION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் எடுத்துக்காட்டாக வரிசையில் நின்று வரிசையாக டிக்கெட் வாங்க வேண்டிய ஒரு இடத்தில் ஒருவர் மற்றவரை தள்ளிக் கொண்டு முன்னாடி செல்ல முயற்சி செய்யும் பொழுது இந்த COMMOTION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் இந்த COMMOTION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தமிழில் தள்ளுமுள்ளு என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
There was a commotion among the participants in the meeting.
கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

There was a commotion at the ticket counter.
டிக்கெட் கவுண்டரில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் கூச்சல் அல்லது சலசலப்பு என்கிற இடத்தில் பயன்படுத்துங்கள் மேலும் தள்ளுமுள்ளு அப்படிங்ற இடத்திலேயும் இந்த COMMOTION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...