Know the word COMPASSION...

Word of the day is COMPASSION...
Pronunciation
/kəmˈpæʃ.ən/

Function
The word COMPASSION is a noun.

Meaning
The word COMPASSION refers to the deep awareness of the suffering of another, coupled with the wish to relieve it என்று சொல்லலாம் அதாவது  மற்றொருவரின் துன்பத்தை பற்றிய ஆழமான விழிப்புணர்வு மற்றும் அதிலிருந்து அவர் விடுபட ஆர்வம்காட்டும் நிலை என்று அர்த்தம்.

அதாவது முன்பின் தெரியாத ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமென்று ஒருவரை அவரது மனது தூண்டுகிறது என்றால் அந்த மனிதர் COMPASSION என்ற இந்த உணர்வை பெற்றிருக்கிறார் என்று அர்த்தம்.

அதாவது முன்பின் தெரியாத ஒருவர் அனுபவிக்கின்ற அந்த துன்பத்தை பார்த்தவுடனே அந்த துன்பத்தில் அவர் படும் அந்த கஷ்டத்தை உணர்ந்தவராக அந்த கஷ்டத்திலிருந்து அவரை விடுவிக்க முயற்சி செய்கின்ற அந்த குணத்தை அல்லது அந்த உணர்வை இந்த COMPASSION என்ற இந்த வார்த்தையால் விளக்கலாம்.

மிகவும் எளிதாக இந்த COMPASSION என்ற இந்த வார்த்தையை விளக்க வேண்டும் என்றால் இந்த COMPASSION என்ற இந்த வார்த்தையானது SYMPATHY மற்றும் EMPATHY ஆகிய இரண்டு வார்த்தைகளின் அர்த்தத்தை உள்ளடக்கியது என்று சொல்லிவிடலாம்.

அதனால் தமிழில் இந்த COMPASSION என்ற இந்த வார்த்தையை இரக்கம் அல்லது கருணை அல்லது பரிவு அல்லது பச்சாதாபம் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்

In a sentence
Everybody thought that the management might show a little compassion to the worker.
நிர்வாகம் தொழிலாளியிடம் கொஞ்சமாவது கருணை காட்டும் என்று எல்லோரும் நினைத்தார்கள்.

He was moved with compassion and helped the poor and needy.
அவர் ஏழையின் மீதும் தேவையில் இருப்பவர் மீதும் இரக்கம் கொண்டு அவர்களுக்கு அவர் உதவினார்.

Practice it
எனவே நண்பர்களே! இரக்கம் அல்லது கருணை அல்லது பரிவு அல்லது பச்சாதாபம் அப்படிங்ற இடத்தில இந்த COMPASSION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...