Know the idiom HAVE SEEN BETTER DAYS...

The Idiom is HAVE SEEN BETTER DAYS.
Function
The idiom, HAVE SEEN BETTER DAYS should be used as a verb.

Meaning
It means to be old and in bad condition என்று சொல்லலாம் அதாவது பழைய மற்றும் மோசமான நிலையில் இருக்கின்ற என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு பொருளோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு இடமோ அல்லது ஒரு வணிகமோ அதனது முந்தைய நன்னிலையை இழக்கும் பொழுது அந்த இடத்திலே HAVE SEEN BETTER DAYS என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு கார் ஆனது பழையதாகி மோசமான நிலையில் இருக்கும் பொழுது அந்த காரை HAVE SEEN BETTER DAYS என்ற இந்த IDIOM ஐ கொண்டு விவரிக்கலாம்.

அதைப் போலவே ஒரு ஆடையானது பழையதாகி மோசமான நிலையில் இருக்கும் போது அந்த ஆடையை HAVE SEEN BETTER DAYS என்ற இந்த IDIOM ஐ கொண்டு விவரிக்கலாம்.

அதைப்போலவே நல்ல பணம் சம்பாதித்து தந்த ஒரு BUSINESS மோசமான நிலையில் இருக்கும் பொழுது அந்த இடத்திலே அந்த BUSINESS ஐ HAVE SEEN BETTER DAYS என்ற இந்த IDIOM ஐ கொண்டு விவரிக்கலாம்.

அதைப் போலவே ஒரு மனிதன் நல்லதொரு சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வயதான நிலையை அடையும் பொழுது அந்த மனிதனையும் கூட HAVE SEEN BETTER DAYS என்ற இந்த IDIOM ஐ கொண்டு விவரிக்கலாம்.

எனவே தமிழில் பழைய அல்லது பழையதான அல்லது நன்னிலையை இழந்த அல்லது வயதான என்ற அர்த்தத்தில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

Note
மேலும் நண்பர்களே! ஒரு வாக்கியத்தில் SUBJECT ஆக Third person singular வரும்பொழுது இந்த IDIOM இல் HAVE க்கு பதிலாக HAS பயன்படுத்த வேண்டும்.

In a sentence
My jacket has seen better days but it is still useful at times.
எனது ஜாக்கெட் பழையதாகி விட்டது ஆனால் சில நேரங்களில் அது இன்னும் பயனுள்ளதாக இருக்கிறது.

The car has seen better days but it is still running.
காரானது பழையதாகி விட்டது ஆனால் அது இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

I have seen better days but I still love going out.
எனக்கு வயதாகி விட்டது ஆனால் நான் இன்னும் வெளியே செல்வதை விரும்புகிறேன்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த HAVE SEEN BETTER DAYS என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்கள்.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...