Know the word COMPREHENSIVE...

Word of the day is COMPREHENSIVE...
Pronunciation
/ˌkɑːm.prəˈhen.sɪv/

Function
The word COMPREHENSIVE can be used as adjective and noun.

The word COMPREHENSIVE has two meanings.

Meaning as adjective
It means complete and including everything that is necessary என்று சொல்லலாம் அதாவது முழுமையான மற்றும் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய என்று அர்த்தம்.

அதாவது ஒரு செயலானது செய்யப்படும் பொழுது அந்த செயலை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து விரிவாக மற்றும் முழுமையாக அந்த செயலானது செய்யப்படும் பொழுது அந்த செயலை விவரிக்க இந்த COMPREHENSIVE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அல்லது ஒரு செயலானது செய்யப்படும் பொழுது அந்த செயலை சார்ந்த ஒவ்வொரு விவரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விரிவாக மற்றும் முழுமையாக அந்த செயலானது செய்யப்படும் பொழுது அந்த செயலை விவரிக்க இந்த COMPREHENSIVE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் உங்களுக்கு புரியும்...

அதாவது மொபைல் போனின் நன்மை தீமைகள் என்ற தலைப்பில் ஒரு கணக்கெடுப்பு நடத்தும் பொழுது மொபைல் போன் பயன்படுத்துபவர்களான ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் இளைஞர்கள் பள்ளி சிறுவர் சிறுமியர் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி அந்த கணக்கெடுப்பு நடத்தும் போது அதனை ஒரு comprehensive survey என்று சொல்லலாம் அதாவது ஒரு விரிவான மற்றும் முழுமையான ஒரு கணக்கெடுப்பு என்று அர்த்தம்.

மருத்துவமனையில் பரிசோதனைக்காக செல்லும் பொழுது தலை முதல் கால் வரை எல்லா பகுதியையும் பரிசோதனை செய்யும் பொழுது அதனை thorough checkup என்று சொல்வோம் அதனை comprehensive checkup என்றும் சொல்லலாம் அதாவது ஒரு விரிவான மற்றும் முழுமையான பரிசோதனை என்று அர்த்தம்.

அதே போன்று ஒரு நிறுவனமானது பணியாட்களை தேர்வு செய்து அவர்களை பணியமர்த்துவதற்கு முன்பாக அவர்கள் தங்கு தடையின்றி வேலை செய்வதற்கு ஏதுவாக அந்த நிறுவனம் சார்ந்த எல்லா விதமான பயிற்சியையும் வழங்கும் பொழுது அந்தப் பயிற்சியை comprehensive training என்று சொல்லலாம் அதாவது ஒரு விரிவான மற்றும் முழுமையான பயிற்சி என்று அர்த்தம்.

அதேபோன்று தற்போது வாகனங்களுக்கு comprehensive insurance வாங்குமாறு அறிவுறுத்துகிறார்கள் அதனுடைய அர்த்தம் என்னவென்றால் அந்த வாகனத்திற்கு எந்த சேதம் ஏற்பட்டாலும் காப்பீடு வழங்கப்படும் என்று அர்த்தம் அந்த காப்பீடை ஒரு விரிவான மற்றும் முழுமையான ஒரு காப்பீடு என்று சொல்லலாம் அதாவது வாகனத்திலுள்ள ஒட்டுமொத்த பொருட்களுக்குமான காப்பீடு என்று அதனை சொல்லலாம்.

இவ்வாறாக இந்த comprehensive என்ற இந்த வார்த்தையை தமிழில் விரிவான அல்லது முழுமையான அல்லது விரிவான மற்றும் முழுமையான அல்லது ஒட்டுமொத்த என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

In a sentence
She gave us a comprehensive picture about the situation there.
அவள் அங்குள்ள சூழ்நிலையைப் பற்றிய ஒரு விரிவான மற்றும் முழுமையான விவரத்தை  எங்களுக்குக் அளித்தாள்.

Meaning as a noun
இந்த comprehensive என்ற இந்த வார்த்தையை  noun ஆக பயன்படுத்தும் பொழுது அது பிரிட்டனிலுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் பதினொன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான பள்ளியை குறிக்கிறது.

In a sentence
இந்த அர்த்தத்தில் ஒரு வாக்கியம் சொல்லும்போது She is working in the local comprehensive என்று சொல்லலாம் அதாவது அவள் உள்ளூரில் உள்ள பள்ளியில் பணிபுரிகிறாள் என்று அர்த்தம்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த comprehensive என்ற இந்த வார்த்தையை adjective ஆக பயன்படுத்தும் பொழுது தமிழில் விரிவான அல்லது முழுமையான அல்லது விரிவான மற்றும் முழுமையான என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க. மேலும் noun ஆக பயன்படுத்தும் பொழுது பிரிட்டனில் உள்ள 11ஆம் வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளி என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...