Know the word CONSOLATION...
Word of the day is CONSOLATION...
/ˌkɑːn.səˈleɪ.ʃən/
Function
The word CONSOLATION is a noun.
Meaning
It means something that makes someone who is sad or disappointed feel better என்று சொல்லலாம் அதாவது சோகத்தில் இருக்கும் ஒருவரை அல்லது ஏமாற்றமடைந்த ஒருவரை இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்ற ஏதாவதொன்று என்று அர்த்தம்.
அதாவது நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையில், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதுதான் உண்மை.
அப்படிப்பட்ட இந்த வாழ்க்கையில் வருத்தம், வேதனை, துன்பம், கஷ்டம், இடறல், தோல்வி போன்றவை அவ்வப்போது வந்து நம்மை வருத்தப்படுத்தும், வேதனைப்படுத்தும் அல்லது கஷ்டப்படுத்தும் அவ்வாறாக நாம் வருத்தப்படும் பொழுது, வேதனைப்படும் பொழுது அல்லது கஷ்டப்படும் பொழுது நமக்கு ஆதரவாக நின்று நம்மை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கென்று ஒருவர் இருக்கும்பொழுது அது மிகவும் சிறப்பாக இருக்கும். அப்படித்தானே?
இவ்வாறாக நாம் கஷ்டப்படும் பொழுது அல்லது வேதனைப்படும் பொழுது அல்லது துன்பப்படும் பொழுது நம்மை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவி செய்கிற அந்த ஒரு விஷயத்தை இந்த CONSOLATION என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
அந்த ஒரு விஷயம் என்று சொல்லும் பொழுது அது ஒருவரின் கனிவான வார்த்தையாக இருக்கலாம் அல்லது ஒருவர் கொடுக்கின்ற ஒரு பொருளாக அல்லது பரிசாகக் கூட இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு போட்டியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் பரிசு வழங்க முயற்சி செய்து எல்லோருக்கும் பரிசு வழங்குமிடத்தில் அந்த பரிசானது முதல் பரிசு அல்லது இரண்டாவது பரிசைவிட சிறந்ததாக இல்லாமல் போனாலும் ஒரு பரிசுமே பெறாமல் போவதைவிட சிறந்தது தானே! அதைத்தான் இந்த CONSOLATION என்ற இந்த வார்த்தையானது குறிக்கிறது.
எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஆறுதல் என்ற இடத்தில் இந்த CONSOLATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
Your words of consolation helped me to come out of my sadness.
உனது ஆறுதல் வார்த்தைகள் எனது சோகத்திலிருந்து வெளிவர எனக்கு உதவியது.
They gave consolation prize for all those who participated.
அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கினர்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் ஆறுதல் என்ற அர்த்தத்தில் இந்த CONSOLATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக