Know the word DEBONAIR...

Word of the day is DEBONAIR...
Pronunciation
/ˌdeb.əˈner/

Function
The word DEBONAIR is an adjective.

Meaning
attractive, confident, and carefully dressed அதாவது கவர்ச்சிகரமாகவும், நம்பிக்கையுடனும், சிறப்பாகவும் உடையணிந்த என்று அர்த்தம்.

அதாவது DEBONAIR என்ற இந்த வார்த்தையானது தனது பேச்சால் அல்லது தனது செயலால் அல்லது தனது மகிழ்ச்சியான மற்றும் மரியாதையான நடத்தையால் அல்லது தான் அணிந்திருக்கும் ஆடையால் பிறரை எளிதாக கவரக்கூடிய ஒரு ஆண் மகனை குறிப்பதற்காக பயன்படுத்துகின்ற ஒரு வார்த்தையாகும்.

பொதுவாகவே நன்றாக குளித்து மிகவும் சிறப்பாக உடை அணிந்து ஒரு பொது இடத்திற்கு போகும் பொழுது தன்னப்போலவே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் உள்ளத்திற்கு வந்துவிடும். எல்லோரிடமும் எளிதாக பேசக்கூடிய ஒரு மனப்பக்குவமும் வந்துவிடும். அப்படித்தானே? ஆனால் அதையும் தாண்டி மிகவும் எளிதாக பிறரை கவரக் கூடிய ஆண் மகனை இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.

ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா எந்தவித கஷ்டமும் இல்லாமல் பிறரை எளிதாக கவரக்கூடிய ஒரு ஆண் மகனை இந்த DEBONAIR என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

DEBONAIR என்ற இந்த வார்த்தைக்கு தமிழில் மரியாதையானவர், மகிழ்ச்சியானவர், கவர்ச்சிகரமானவர் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம் ஆனால் அதேநேரத்தில் இவையெல்லாம் கலந்த ஒரு நபரைத்தான் இந்த DEBONAIR என்ற இந்த வார்த்தை குறிக்கிறது என்பதை மறந்து விடாதீங்க.

In a sentence
He is a debonair gentleman.
அவர் ஒரு மகிழ்ச்சியான மரியாதையான நன்மகன்.

He is a debonair young man.
அவர் ஒரு கவர்ச்சிகரமான நற்பண்புகள் கொண்ட இளைஞன்.

Practice it
எனவே நண்பர்களே! மரியாதையானவர், மகிழ்ச்சியானவர், கவர்ச்சிகரமானவர் என்ற அர்த்தத்தில் இந்த DEBONAIR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...