Know the word DEPRIVED...

Word of the day is DEPRIVED...
Pronunciation
/dɪˈpraɪvd/

Function
The word DEPRIVED is an adjective.

Meaning
not having the things that are necessary for a pleasant life என்று சொல்லலாம் அதாவது சந்தோஷமான வாழ்க்கை வாழ தேவையானவை இல்லாமல் இருத்தல் என்று அர்த்தம்.

அதாவது இந்த DEPRIVED என்ற இந்த வார்த்தையை சிறிய அளவிலும் பயன்படுத்தலாம் பெரிய அளவிலும் பயன்படுத்தலாம்.

சிறிய அளவில் பயன்படுத்தலாம் என்று சொல்லும்பொழுது ஏதாவதொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் ஐஸ்க்ரீம் கிடைத்த இடத்தில் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்காமல் போகும் பொழுது அந்த இடத்தில் இந்த DEPRIVED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் தட்டுப்பாடு என்கிற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

பெரிய அளவில் பயன்படுத்தலாம் என்று சொல்லும்பொழுது ஒரு மனிதனின் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் அல்லது தண்ணீர், மின்சாரம் போன்ற இன்றியமையாத விஷயங்கள் இல்லாமல் தவிக்கும்போது அல்லது போதுமானதாக இல்லாமல் இருக்கும்போதும் DEPRIVED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் இல்லாமல் தவித்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

அதாவது deprived of water என்று சொல்லும்போது குடிநீர் இல்லாமல் தவித்தல் என்று அர்த்தம். அதைப்போல deprived of electricity என்று சொல்லும்பொழுது மின்சாரம் இல்லாமல் தவித்தல் என்று அர்த்தம்

In a sentence
The whole city is deprived of water supply.
நகரம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டில் உள்ளது.
நகரம் முழுவதும் குடிநீர் இல்லாமல் தவித்து வருகிறது.

At present he is deprived of money to live a happy life.
தற்போது அவர் சந்தோஷமான வாழ்க்கை வாழ தேவையான பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் தட்டுப்பாடு அல்லது இல்லாமல் தவித்தல் என்ற அர்த்தங்களில் இந்த DEPRIVED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...