Know the word DIPLOMATIC...

Word of the day is DIPLOMATIC...
Pronunciation
/ˌdɪp.ləˈmæt̬.ɪk/

Function
The word DIPLOMATIC is an adjective.

Meaning
DIPLOMATIC என்ற இந்த வார்த்தையை ஒரு அருமையான தந்திரங்கள் நிறைந்த ஒரு வார்த்தை என்று சொல்லலாம். it means acting in a way that does not offend others என்று சொல்லலாம் அதாவது பிறர் மனம் புண்படாத வகையில் செயல்படுவது என்று அர்த்தம்.

தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இராஜதந்திர என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

இராஜதந்திரம் என்று சொல்லும்பொழுது இந்த வார்த்தையை ஒரு நெகட்டிவான அர்த்தம் கொண்டதாக பார்க்கக் கூடாது மாறாக நடுநிலையாக செயல்படக்கூடிய ஒரு வார்த்தையாக பார்க்கவேண்டும்.

அதாவது இந்த DIPLOMATIC என்ற இந்த வார்த்தையை சிறிய அளவிலும் பயன்படுத்தலாம் பெரிய அளவில் பயன்படுத்தலாம்.

சிறிய அளவில் பயன்படுத்தலாம் என்று சொல்லும்பொழுது, நம்மால் நாம் சொல்ல வருகின்ற ஒரு கருத்தை எதிர்தரப்பினரின் மனம் புண்படாதவாறு அந்தக் கருத்தை சொல்ல முடியும் பொழுது நம்மை நாம் DIPLOMAT (Noun) என்று சொல்லிக் கொள்ளலாம்.

மேலும் இரு தரப்பினரிடையே ஒரு கருத்தின் அடிப்படையில் மோதல் ஏற்படும் பொழுது அவர்கள் இருவருக்கிடையே சமரசத்தை உங்களால் ஏற்படுத்தும் பொழுது நீங்க DIPLOMATIC ஆக அங்கே செயல்படுறீங்க என்று அர்த்தம்.

பெரிய அளவில் பயன்படுத்தும் பொழுது இரண்டு நாடுகளுக்கிடையே பிரச்சினைகள் ஏற்படும்பொழுது அங்கே சமரசத்தை ஏற்படுத்த இன்னொரு நாடே செயல்படும் பொழுது அந்த நாடானது அங்கே DIPLOMATIC ஆக செயல்படுகிறது என்று சொல்லப்படும்.

எனவே நண்பர்களே! இவ்வாறாக இரண்டு நபர்களுக்கிடையே அல்லது இரண்டு நாடுகளுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்தும்போது இந்த DIPLOMATIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
If you are diplomatic, you will avoid many problems.
நீங்கள் இராஜதந்திரமாக செயல்பட்டால், நீங்கள் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

His diplomatic negotiation helped to solve the problem.
அவரது இராஜதந்திர பேச்சுவார்த்தை பிரச்சினையை தீர்க்க உதவியது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் இராஜதந்திர அல்லது இராஜதந்திரம் என்ற அர்த்தங்களில் இந்த DIPLOMATIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...