Know the word ELUCIDATE...

Word of the day is ELUCIDATE...
Pronunciation
/iˈluː.sə.deɪt/

Function
The word ELUCIDATE is a verb.

Meaning
to make something very clear அதாவது மிகத் தெளிவாக ஒன்றைச் சொல்லுதல் என்று அர்த்தம்.

அதாவது எல்லோருக்குமே எல்லா விஷயமுமே சொன்னவுடனே புரிந்து விடாது ஒவ்வொருவரின் புரிந்துகொள்ளும் தன்மையைப் பொருத்து அது மாறுபடும். இவ்வாறாக புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும் ஒரு விஷயத்தை தெளிவாக எடுத்துக் கூறி புரிய வைக்கும் பொழுது இந்த ELUCIDATE என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக கணிதத்தில் கடினமான ஒரு பகுதியை புரிய முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு மாணவனுக்கு அந்த கணித பகுதியை அக்குவேராக ஆணிவேராக பிரித்தெடுத்து அவனுக்கு புரியும்படி தெளிவாக எடுத்துச் சொல்லும் பொழுது இந்த ELUCIDATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதேபோன்று பூமியின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இவ்வாறாக பூமியின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கான காரணங்களை தெளிவாக விளக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த ELUCIDATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

இவ்வாறாக ஒரு விஷயத்தை தெளிவாக விளக்கிக் கூறும் ஒரு இடத்தில் இந்த ELUCIDATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

எனவே தமிழில் தெளிவுபடுத்துதல் அல்லது தெளிவாக விளக்குதல் என்ற அர்த்தத்தில் இந்த ELUCIDATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
The author elucidated the bad influence of smartphones in the society.
சமூகத்தில் ஸ்மார்ட்போன்களின் மோசமான தாக்கத்தை ஆசிரியர் தெளிவுபடுத்தினார்.

The manager elucidated some of the important Terms and Conditions of the company. 
மேலாளர் நிறுவனத்தின் சில முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை  தெளிவாக விளக்கினார்.

Practice it
எனவே நண்பர்களே! தெளிவுபடுத்துதல் அல்லது தெளிவாக விளக்குதல் என்ற அர்த்தத்தில் இந்த ELUCIDATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...