Know the word ERADICATE...
Word of the day is ERADICATE...
/ɪˈræd.ɪ.keɪt/
Function
The word ERADICATE is a verb.
Meaning
to get rid of something completely அதாவது எதையாவதொன்றை முற்றிலுமாக அகற்றுதல் என்று அர்த்தம்.
அதாவது இந்த ERADICATE என்ற இந்த வார்த்தையை ஒரு அருமையான வார்த்தை என்று சொல்லலாம் ஏனென்றால் இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படும் பொழுது ஏதோ நல்லது ஒன்று நடக்கப் போகிறது என்று அர்த்தமாக கொள்ளலாம்.
அதாவது இந்த ERADICATE என்ற இந்த வார்த்தையானது சமூகத்தில் நடைபெறும் தீமையான ஒன்றை அல்லது அநீதியான ஒன்றை முற்றிலுமாக அழித்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு வார்த்தையாகும்.
மேலும் சமூகத்தில் வேரூன்றி இருக்கும் எல்லாவித களைகளையும் அடியோடு வேரோடு பிடுங்கி அழித்தல் எனும் இடத்தில் பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தையாகும். அதாவது சமூகத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்த களையானது மீண்டும் தோன்றுவதற்கான வாய்ப்பே இல்லை என்னும் அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.
தமிழில் முற்றிலுமாக ஒழித்தல் அல்லது நிர்மூலமாக்குதல் என்ற அர்த்தத்தில் இந்த ERADICATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The present virus is eradicated from the world.
தற்போது பரவி வரும் இந்த வைரஸானது உலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.
Is it possible to eradicate poverty from this world?
இந்த உலகத்திலிருந்து வறுமையை முற்றிலுமாக ஒழிக்க முடியுமா?
Practice it
எனவே நண்பர்களே! முற்றிலுமாக ஒழித்தல் அல்லது நிர்மூலமாக்குதல் அப்படிங்ற இடத்தில இந்த ERADICATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக