Know the word EXPLICIT...

Word of the day is EXPLICIT...
Pronunciation
/ɪkˈsplɪs·ɪt/

Function
The word EXPLICIT is an adjective.

Meaning
EXPLICIT என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம்.

முதலாவதாக it means communicated directly in a clear and exact way என்று சொல்லலாம் அதாவது தெளிவாகவும் துல்லியமாகவும் நேரடியாகவும் தெரிவிக்கப்பட்ட என்று அர்த்தம்.

அதாவது ஒருவர் சொல்ல வருகின்ற ஒரு கருத்தை சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக சொல்லும் பொழுது இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும்பொழுது தமிழில் வெளிப்படையான அல்லது விளக்கமான என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்

இரண்டாவதாக it means showing full details without anything hidden என்று சொல்லலாம் அதாவது எதையும் மறைக்காமல் முழு விவரத்தையும் காட்டுவது என்று அர்த்தம்.

அதாவது ஒளிவு மறைவாக காட்டப்பட வேண்டிய சில விஷயங்களும் இருக்கிறது அப்படிப்பட்ட விஷயங்களை ஒளிவு மறைவாகத்தான் காட்ட வேண்டும் அதுதான் சிறப்பாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டாக ஆபாச காட்சிகள் வன்முறைகள், கொலைகள் போன்ற மனதிற்கு நெருடலை ஏற்படுத்துகின்ற விஷயங்கள் ஒளிவு மறைவாகத்தான் காட்டப்பட வேண்டும்.

இவ்வாறாக ஒளிவு மறைவாக காட்டப்பட வேண்டிய விஷயங்கள் ஒளிவு மறைவாக காட்டப்படாமல் வெட்டவெளிச்சமாக காட்டப்படும் பொழுது இந்த EXPLICIT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் வெட்டவெளிச்சமாக என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்

In a sentence
He does not want to give any explicit solution for the problem.
அவர் பிரச்சனைக்கு வெளிப்படையான தீர்வு எதையும் கொடுக்க விரும்பவில்லை.

This movie has sexually explicit content.
இந்தப் படத்தில் பாலியல் காட்சிகள் வெட்டவெளிச்சமாக காட்டப்பட்டுள்ளது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் வெளிப்படையான அல்லது விளக்கமான அல்லது வெட்டவெளிச்சமாக என்ற அர்த்தங்களில் இந்த EXPLICIT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...