Know the word IMPASSE...

Word of the day is IMPASSE...
Pronunciation
/ˈɪm.pæs/

Function
The word IMPASSE is a noun.

Meaning
IMPASSE என்ற இந்த வார்த்தையை ஒரு அருமையான ஒரு வார்த்தை என்று சொல்லலாம்.

it means a situation in which progress is impossible, especially because the people involved cannot agree என்று சொல்லலாம் அதாவது சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக்கொள்ள முடியாததால் ஏற்படுகின்ற முன்னேற்றம் சாத்தியமற்ற ஒரு சூழ்நிலை என்று அர்த்தம்.

அதாவது சில நேரங்களில் எவ்வளவு பெரிய இராஜதந்திரீகள் இருந்தாலும் எவ்வளவு பெரிய இராஜதந்திரங்கள் செய்தாலும்  இரண்டு எதிர்தரப்பினருக்கிடையே ஏற்படுகிற கருத்து வேறுபாட்டில் எந்தவித சமரசத்தையும் எட்ட முடியாத நிலையே தொடரும் அதாவது கூட்டம் ஆரம்பிக்கும் போது எந்த சூழ்நிலை இருந்ததோ அதே சூழ்நிலைதான் கூட்டம் முடிந்த பின்பும் இருக்கும் என்று சொல்லலாம்.

இவ்வாறாக இரண்டு தரப்பினருக்கிடையே ஏற்பட்டிருக்கிற கருத்து மோதலில் எந்தவித முன்னேற்றத்தையும் எட்ட முடியாத இடத்தில் இந்த IMPASSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

சதுரங்க விளையாட்டில் இந்த நிலையை STALEMATE என்று சொல்வார்கள் அதாவது ராஜாவை தொடர்ந்து அடுத்த எந்த ஒரு கட்டத்திற்கு நகர்த்த முடியாத ஒரு நிலை என்று சொல்லலாம் இதனை தமிழில் ஸ்தம்பித்த நிலை என்று அழகாக சொல்வார்கள்.

மேலும் தொடர்ந்து செல்ல முடியாத ஒரு சாலையை அல்லது ஒரு பாதையை தமிழில் முட்டுச்சந்து என்று சொல்லுவோம் அந்த இடத்திலும் இந்த IMPASSE என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

எனவே நண்பர்களே! மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை அல்லது ஸ்தம்பித்த நிலை அல்லது முட்டுக்கட்டை அல்லது முட்டுச்சந்து என்ற அர்த்தங்களில் இந்த IMPASSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Though there were many diplomats, the meeting ended in an impasse on the negotiation.
பல இராஜதந்திரிகள் இருந்தபோதிலும், பேச்சுவார்த்தையில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில் கூட்டம் முடிந்தது.

This road leads to an impasse that you can't reach the other side.
இந்த சாலையானது முட்டுச்சந்திற்கு அழைத்துச் செல்லும் அதனால் உங்களால் மறுபுறத்தை அடைய முடியாது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை அல்லது ஸ்தம்பித்த நிலை அல்லது முட்டுக்கட்டை அல்லது முட்டுச்சந்து என்ற அர்த்தங்களில் இந்த IMPASSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...