Know the word IMPECCABLE...

Word of the day is IMPECCABLE...
Pronunciation
/ɪmˈpek·ə·bəl/

Function
The word IMPECCABLE is an adjective.

Meaning
without mistakes or faults அதாவது தவறுகள் அல்லது குறைகள் இல்லாத என்று அர்த்தம்.

இந்த IMPECCABLE என்ற இந்த வார்த்தைக்கு நிகரான ஒரு ஆங்கில வார்த்தை PERFECT ஆகும் இதனுடைய தமிழ் அர்த்தமானது பூரணமான என்பதாகும்.

எனவே இந்த IMPECCABLE என்ற இந்த வார்த்தையை தமிழில் குறையே இல்லாத, தவறே இல்லாத மற்றும் அப்பளுக்கற்ற என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

அதாவது இந்த IMPECCABLE என்ற இந்த வார்த்தையானது ஏதாவதொன்று மிகவும் சிறப்பாக எந்தவித குறையுமே இல்லாமல் உயர்தரமாக நடந்து முடியும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை என்று சொல்லலாம் அல்லது யாராவதொருவர் செய்யும் ஒரு செயலில் அல்லது அவரது நடத்தையில் அல்லது அவர் வெளிகாட்டும் ஏதாவதொரு திறமையில் தவறு அல்லது குறை என்ற வார்த்தைக்கே இடம் கொடுக்காமல் சிறப்பாக, உயர்தரமாக மற்றும் நிறைவாக செய்து முடிக்கும் பொழுது இந்த IMPECCABLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒருவர் எந்தவித தவறுமே இல்லாமல் ஆங்கிலம் பேசும் பொழுது அவரை
He/She speaks impeccable English. என்று சொல்லலாம்.

அதனைப் போன்று ஒரு குழுவானது மிகவும் அருமையான உயர்தரமான எந்தவிதத் தவறுமே இல்லாத ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்றும் பொழுது
அவர்களது அந்த நிகழ்ச்சியை
Their performance was impeccable. என்று சொல்லி பாராட்டலாம்.

மேலும் ஒரு பொது நிகழ்ச்சியில் மாணவர்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளும் பொழுது அந்த மாணவர்களை
You have an impeccable behavior என்று சொல்லி பாராட்டலாம்.

Practice it
இவ்வாறாக ஒருவர் செய்யும் செயலில் அல்லது அவரது நடத்தையில் அல்லது அவர் வெளிகாட்டும் ஏதாவதொரு திறமையில் தவறு அல்லது குறை என்ற வார்த்தைக்கே இடம் கொடுக்காமல் சிறப்பாக, உயர்தரமாக மற்றும் நிறைவாக செய்து முடிக்கும் பொழுது இந்த IMPECCABLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...