Know the word IMPLICIT...

Word of the day is IMPLICIT...
Pronunciation
/ɪmˈplɪs.ɪt/

Function
The word IMPLICIT is an adjective.

Meaning
IMPLICIT என்ற இந்த வார்த்தையானது அருமையான இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக it means suggested but not communicated directly என்று சொல்லலாம் அதாவது நேரடியாகத் தெரிவிக்கபடாமல் பரிந்துரைக்கப்பட்ட என்று அர்த்தம்.

அதாவது ஒருவர் தான் சொல்ல வருகின்ற ஒரு கருத்தை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லும்பொழுது இந்த IMPLICIT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

இந்த IMPLICIT என்ற இந்த வார்த்தையானது IMPLY என்ற இந்த வார்த்தையினுடைய ADJECTIVE ஆகும்.

எனவே இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது மறைமுகமான என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக it means complete and without any doubts என்று சொல்லலாம் அதாவது முழுமையான மற்றும் எந்தவித சந்தேகமும் இல்லாத என்று அர்த்தம்.

அதாவது இந்த IMPLICIT என்ற இந்த வார்த்தையை ஒருவர் ஒரு நபர் மீதோ அல்லது ஒரு விஷயத்தின் மீதோ எந்தவித சந்தேகமும் இல்லாமல் முழுமையாக நம்பும் பொழுது பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும்பொழுது implicit trust, implicit faith or implicit belief என்று நம்பிக்கை சார்ந்த வார்த்தைகளை தொடர்ந்து எழுதியே பயன்படுத்த வேண்டும்.

எனவே இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது முழுமையான என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
His implicit comments tell me that he does not like to get married.
அவரது மறைமுகமான கருத்துக்கள் அவருக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என்று எனக்கு கூறுகின்றது.

It is our implicit rule that we don't talk about others.
பிறரைப் பற்றி பேசக்கூடாது என்பது எங்களது மறைமுகமான விதி.

She has implicit faith in God.
அவள் முழுமையாக கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறாள்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் மறைமுகமான அல்லது முழுமையான என்ற அர்த்தங்களில் இந்த IMPLICIT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...