Know the word INSTILL...
Word of the day is INSTILL...
/ɪnˈstɪl/
Function
The word INSTILL is a verb.
Meaning
It means to impart something gradually என்று சொல்லலாம் அதாவது எதையாவது ஒன்றை படிப்படியாக கொடுத்தல் என்று அர்த்தம்.
அதாவது இந்த INSTILL என்ற இந்த வார்த்தையானது அதிகப்படியாக ஒருவரின் மனதினுள் விரும்பத் தகுந்த நல்ல விஷயங்களை அல்லது நல்ல எண்ணங்களை அல்லது நல்ல செயல்களை படிப்படியாக அல்லது கொஞ்சம் கொஞ்சமாக செலுத்துதல் அல்லது கொடுத்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் அதன் விளைவாக அந்த மனிதனின் எண்ணங்களில், செயல்களில், குணங்களில் ஒரு பெரிய மாற்றத்தையே அது ஏற்படுத்தக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் நல்ல விஷயங்களை அல்லது நல்ல எண்ணங்களை அல்லது நல்ல செயல்களை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி வளர்கிற இடத்தில் இந்த INSTILL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே ஆசிரியர்கள் தங்களது மாணவர்களிடம் நல்ல ஒழுக்கங்களை, நல்ல பழக்கவழக்கங்களை ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி வளர்கிற இடத்தில் இந்த INSTILL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் இந்த INSTILL என்ற இந்த வார்த்தையை கொஞ்சம் கொஞ்சமாக விதைத்தல் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக செலுத்துதல் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டுதல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
In a sentence
It is always important to instill some good characters in the heart of the students.
மாணவர்களின் உள்ளத்தில் சில நல்ல குணங்களை கொஞ்சம் கொஞ்சமாக விதைத்தல் எப்போதும் முக்கியமாகும்.
Parents should instill some positive thoughts in the mind of their kids.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் மனதில் நேர்மறையான எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக விதைக்க வேண்டும்.
Practice it
எனவே நண்பர்களே! கொஞ்சம் கொஞ்சமாக விதைத்தல் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக செலுத்துதல் அல்லது கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டுதல் அப்படிங்ற இடத்தில இந்த INSTILL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக