Know the word MANIPULATE...

Word of the day is MANIPULATE...
Pronunciation
/məˈnɪp.jə.leɪt/

Function
The word MANIPULATE is a verb.

Meaning
MANIPULATE என்ற இந்த வார்த்தையை பாசிட்டிவாகவும் பயன்படுத்தலாம் நெகட்டிவாகவும் பயன்படுத்தலாம்.

ஆரம்ப காலகட்டத்தில் பாசிட்டிவாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையானது தற்பொழுது நெகட்டிவாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

பாசிட்டிவாக பயன்படுத்தும்பொழுது it means to control something using the hands என்று சொல்லலாம் அதாவது கைகளை பயன்படுத்தி எதையாவதொன்றை கட்டுப்படுத்துதல் என்று அர்த்தம்.

அதாவது கைகளை பயன்படுத்தி ஒரு பொருளை அல்லது ஒரு கருவியை அல்லது ஒரு ஆயுதத்தை சிறப்பாக, திறமையாக கையாளுதல் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டாக ஒரு குயவன் களிமண்ணை கொண்டு ஒரு பானையை வடிவமைக்கும் பொழுது தனது கையை திறமையாக கையாண்டு பானையை செய்து முடிக்கிறான் அந்த இடத்திலே இந்த MANIPULATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் ஒரு ஜேசிபி ஓட்டுனர் மிகவும் சிறப்பாக தனது கையால் அந்த வாகனத்தை கையாண்டு கொடுக்கப்படுகின்ற ஒரு வேலையை செய்து முடிக்கிறார் அந்த இடத்திலே இந்த MANIPULATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக இந்த MANIPULATE என்ற இந்த வார்த்தையானது பாசிட்டிவாக பயன்படுத்தப்பட்டது, பாசிட்டிவாக பயன்படுத்தப்படுகிறது இன்றும் இந்த அர்த்தத்தில் இதனை பாசிட்டிவாக பயன்படுத்தலாம்.

இவ்வாறாக பாசிட்டிவாக பயன்படுத்தும் பொழுது தமிழில் கையாளுதல் அல்லது திறமையாக கையாளுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக இந்த வார்த்தையை நெகட்டிவாக பயன்படுத்தலாம். இந்த அர்த்தத்தில்தான் இந்த வார்த்தையானது தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது it means to control something or someone to one's advantage, often unfairly or dishonestly என்று சொல்லலாம் அதாவது ஒருவர் எதையாவதொன்றை அல்லது யாராவதொருவரை பெரும்பாலும் நியாயமற்ற முறையில் அல்லது நேர்மையற்ற முறையில் அவருக்கு சாதகமாக கட்டுப்படுத்துதல் என்று அர்த்தம்.

அதாவது ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற பதவியை அல்லது தனக்குக் கீழே பணிபுரிகின்ற பணியாட்களை அல்லது தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு பொருளை அல்லது கருவியை சுயநலமாக, தனக்கு சாதகமாக நேர்மையற்ற முறையில், நியாயமற்ற முறையில் கையாளும் பொழுது இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.

மேலும் இவ்வாறாக அவர்கள் நேர்மையற்ற முறையில் நியாயமற்ற முறையில் கையாளுவதை கையாளப்படுபவர்கள் அறியாமலேயே இருப்பார்கள் என்பது இதில் மறைந்திருக்கும் மிகப்பெரிய உண்மையாகும்.

இந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் நேர்மையற்ற முறையில் கையாளுதல் அல்லது நியாயமற்ற முறையில் கையாளுதல் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He has learnt to manipulate this machine adroitly.
அவன் இந்த இயந்திரத்தை சாமர்த்தியமாக கையாளக் கற்றிருக்கிறான்.

Throughout her career she had successfully manipulated her boss.
அவளது வேலை நாட்கள் முழுவதும் அவள் அவளது முதலாளியை வெற்றிகரமாக நியாயமற்ற முறையில் கையாண்டாள்.

Practice it
எனவே நண்பர்களே! கையாளுதல் அல்லது திறமையாக கையாளுதல் மேலும் நேர்மையற்ற அல்லது நியாயமற்ற முறையில் கையாளுதல் அப்படிங்ற இடத்தில இந்த MANIPULATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...