Know the word OUTRAGEOUS...

Word of the day is OUTRAGEOUS...
Pronunciation
/ɑʊtˈreɪ·dʒəs/

Function
The word OUTRAGEOUS is an adjective.

Meaning
morally unacceptable and shocking or unusual அதாவது ஒழுக்கக்கேடான மற்றும் அதிர்ச்சி தரக்கூடிய அல்லது வழக்கத்திற்கு மாறான என்று அர்த்தம்.

அதாவது ஒரு மனிதன் அல்லது ஒரு நிறுவனத்தின் செயலானது ஒழுக்கக்கேடானதாக அதிர்ச்சி தரக்கூடியதாக வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும் பொழுது இந்த OUTRAGEOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக சாப்பாட்டிற்கே வழியில்லாமல் மக்கள் கஷ்டப்படுகிற ஒரு இடத்தில் உணவை வீணடிப்பது ஒரு ஒழுக்கக்கேடான அதிர்ச்சி தரக்கூடிய வழக்கத்திற்கு மாறான ஒரு செயலாகும். அந்த இடத்தில் இந்த OUTRAGEOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பெற்றோரே குழந்தைகளை தவறாக பயன்படுத்தும் பொழுது அதனை ஒரு ஒழுக்கக்கேடான அதிர்ச்சி தரக்கூடிய வழக்கத்திற்கு மாறான ஒரு செயல் என்று சொல்லலாம். அந்த இடத்தில் இந்த OUTRAGEOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவர் பேசும்பொழுது அவரைப் பேசவிடாமல் கத்தி கூச்சலிடும் பொழுது அந்த செயலானது ஒரு ஒழுக்கக்கேடான அதிர்ச்சி தரக்கூடிய வழக்கத்திற்கு மாறான ஒரு செயலாகும். அந்த இடத்தில் இந்த OUTRAGEOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதே போன்று மக்களின் சேவைக்காக இயங்கும் ஒரு நிறுவனம் சேவை மனப்பான்மையை மறந்து சுயநலமாக அதிக பணம் ஈட்டும் நோக்கத்தோடு செயல்படும் பொழுது அந்த செயலானது ஒரு ஒழுக்கக்கேடான அதிர்ச்சி தரக்கூடிய வழக்கத்திற்கு மாறான ஒரு செயலாகும். அந்த இடத்தில் இந்த OUTRAGEOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு செயலானது ஒழுக்கக்கேடானதாக அதிர்ச்சி தரக்கூடியதாக வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும் பொழுது அந்த இடத்தில் இந்த OUTRAGEOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

தமிழில் மிகவும் ஒழுக்கக்கேடான அல்லது மூர்க்கத்தனமான என்ற அர்த்தங்களில் இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்.

In a sentence
It is outrageous to steal the money that is confided to your care.
உங்களது பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட பணத்தைத் திருடுவது மிகவும் ஒழுக்கக்கேடானது.

It is outrageous to waste the water when people are in need of it.
மக்கள் தண்ணீரின் தேவையில் இருக்கும் பொழுது அதனை வீணாக்குவது மூர்க்கத்தனமானது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் மிகவும் ஒழுக்கக்கேடான அல்லது மூர்க்கத்தனமான என்ற அர்த்தங்களில் இந்த OUTRAGEOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...