Know the word PETTY...
Word of the day is PETTY...
/ˈpet.i/
Function
The word PETTY is an adjective.
Meaning
It means small or of little importance என்று சொல்லலாம் அதாவது சிறிய அல்லது முக்கியத்துவம் இல்லாத என்று அர்த்தம்.
அதாவது மிகவும் எளிதாக புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் இந்தப் PETTY என்ற இந்த வார்த்தையை நாம் தமிழில் மிக சாதாரணமாக அடிக்கடி ஒரு இடத்தில் பயன்படுத்துவோம் அதாவது பெட்டிக்கடை என்று சொல்லுவோம் அதாவது ஆங்கிலத்தில் PETTY SHOP என்று அர்த்தம் அதாவது சிறிய கடை என்று அர்த்தம்.
இவ்வாறாக இந்த PETTY என்ற இந்த வார்த்தையானது ஆங்கிலத்தில் சிறிய என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது அதையும் தாண்டி சில நெகட்டிவான அர்த்தங் கொண்டதாகவும் இந்த வார்த்தையானது பார்க்கப்படுகிறது எடுத்துக்காட்டாக முக்கியமே இல்லாத அல்லது குறைவான முக்கியம் கொண்ட அல்லது ஒண்ணுமே இல்லாத என்ற அர்த்தத்திலும் இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படுகிறது.
In a sentence
எடுத்துக்காட்டாக He gives importance to petty things என்று சொல்லலாம் அதாவது அவர் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று அர்த்தம் இது ஒரு பாசிட்டிவான அர்த்தம் கிடையாது மாறாக ஒரு நெகட்டிவான அர்த்தமாக பார்க்கப்படுகிறது.
You need not worry on these petty matters என்று சொல்லலாம் அதாவது நீ இந்த சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று அர்த்தம் அல்லது நீ இந்த ஒண்ணுமே இல்லாத விஷயங்களுக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று அர்த்தம்.
மேலும் ஒருவர் சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் complain பண்ணி கொண்டு இருக்கும் பொழுது அவரை Don't be so petty என்று சொல்லலாம் அதாவது மிகவும் சின்னத்தனமாக இருக்காதே என்று அர்த்தம்.
Practice it.
இவ்வாறாக தமிழில் சிறிய, சின்ன சின்ன, அற்பமான, சின்னத்தனமான அல்லது ஒண்ணுமே இல்லாத போன்ற அர்த்தங்களில் இந்த PETTY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக