Know the word PRECIPICE...

Word of the day is PRECIPICE...
Pronunciation
/ˈpres.ə.pɪs/

Function
The word PRECIPICE is a noun.

Meaning
இந்த PRECIPICE என்ற இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம் முதலாவதாக it refers to a very steep side of a cliff or a mountain என்று சொல்லலாம் அதாவது ஒரு குன்றின் அல்லது மலையின் மிகவும் செங்குத்தான பகுதி என்று அர்த்தம்.

அதாவது சில மலைகளினுடைய சில பகுதிகள் மலையின் அடியிலிருந்து நேர் செங்குத்தாக அமைந்திருக்கும் பெரும்பாலும் மலையேறுபவர்கள் எல்லோரும் மலையின் இந்தப் பகுதியையே மலையேறி சாகசம் செய்வதற்கு பயன்படுத்துவார்கள். இவ்வாறாக செங்குத்தாக அமைந்திருக்கும் மலையின்  அந்த உச்சி பகுதியை இந்த PRECIPICE என்று இந்த வார்த்தையானது குறிக்கிறது.

இந்த அர்த்தத்தில் இந்த PRECIPICE சென்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் செங்குத்து பாறை அல்லது செங்குத்து சரிவு அல்லது செங்குத்து பகுதி என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக இந்த PRECIPICE என்ற இந்த வார்த்தையை ஒரு உருவகமாக பயன்படுத்தலாம் அதாவது The brink of a dangerous situation என்று சொல்லலாம் அதாவது ஆபத்தான சூழ்நிலையின் விளிம்பு என்று அர்த்தம்.

அதாவது இந்த PRECIPICE என்ற இந்த வார்த்தையை ஒரு உருவகமாக பயன்படுத்தும் பொழுது  மலையினுடைய அந்த செங்குத்து உச்சி பகுதியின் விளிம்பில் நிற்பது எவ்வளவு ஆபத்தானதோ அதேபோன்று வாழ்க்கையில் மிகப்பெரிய தீங்கு அல்லது மிகப்பெரிய தோல்விக்கு வழிவகுக்கும் ஒரு ஆபத்தான சூழ்நிலையின் விளிம்பில் நிற்பதை குறிப்பதற்காக பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் இந்த PRECIPICE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தமிழில் மிகப்பெரிய ஆபத்து அல்லது மிகப்பெரிய தீங்கு அல்லது மிகப்பெரிய நெருக்கடி என்ற அர்த்தங்களில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
She was about to fall down while looking down from the precipice of the mountain.
மலையின் செங்குத்து பகுதியிலிருந்து கீழே பார்க்கும்போது அவள் கீழே விழப்போனாள்.

He is so scared that his business is at the financial precipice.
அவரது வணிகம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருப்பதை நினைத்து அவர் மிகவும் பயப்படுகிறார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் செங்குத்து பாறை அல்லது செங்குத்து சரிவு அல்லது செங்குத்து பகுதி  என்கிற இடத்தில் பயன்படுத்துங்கள் மேலும் மிகப்பெரிய ஆபத்து அல்லது மிகப்பெரிய தீங்கு அல்லது மிகப்பெரிய நெருக்கடி அப்படிங்ற இடத்திலேயும் இந்த PRECIPICE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...