Know the word PROCRASTINATE...
Word of the day is PROCRASTINATE...
/proʊˈkræs.tə.neɪt/
Function
The word PROCRASTINATE is a verb.
Meaning
to postpone doing what one should be doing அதாவது ஒருவர் செய்ய வேண்டிய ஒரு வேலையை தள்ளிப் போடுதல் என்று அர்த்தம்.
அதாவது எல்லாருமே எல்லாத்தையுமே எப்பொழுதும் முழு விருப்பத்தோடையே செய்ய மாட்டாங்க. பொதுவாக எல்லாருமே அவர்களுக்கு விருப்பமான ஒன்றை செய்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவாங்க மேலும் அதனை உடனே செய்வாங்க அதேநேரத்தில் விருப்பம் இல்லாத ஒன்றை செய்வதற்கு காலம் தாழ்த்துவாங்க மேலும் அதனை செய்வதை சிறிது காலம் தள்ளி போடுவாங்க.
பொதுவாக ஒருவர் ஒரு வேலையை செய்யாமல் தள்ளிப் போடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் எடுத்துக்காட்டாக செய்யவேண்டிய வேலை கடினமானதாக இருக்கலாம் அல்லது செய்ய வேண்டிய வேலை எரிச்சலை தரக்கூடியதாக இருக்கலாம் அல்லது அந்த வேலையை செய்வதற்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம் அல்லது அந்த வேலையை செய்வதனால் எந்தவித பலனும் இல்லாமல் இருக்கலாம்.
இவ்வாறாக ஒருவர் ஒரு வேலையை செய்யாமல் தள்ளிப் போடுவதற்கு சொல்லப்படுகின்ற காரணமானது ஏற்றுக்கொள்ள கூடியதாக, நேர்மையானதாக இருக்கலாம் அல்லது அப்படி இல்லாமலும் இருக்கலாம்.
இவ்வாறாக ஒரு வேலையை செய்யாமல் தள்ளிப் போடுவதற்கு சொல்லப்படுகின்ற காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக நேர்மையானதாக இருக்கும்பொழுது அந்த இடத்திலே POSTPONE என்ற VERB ஐ பயன்படுத்த வேண்டும்.
அதற்கு மாறாக ஒருவர் அவர் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் தள்ளிப் போடுவதற்கு சொல்கின்ற காரணம் ஏற்றுக்கொள்ள முடியாததாக, நேர்மையற்றதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த PROCRASTINATE என்ற இந்த VERB ஐ பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறாக இந்த PROCRASTINATE என்ற இந்த VERB ஆனது 100% நெகட்டிவ் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் ஒருவர் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் தள்ளிப் போடுவதற்கு சொல்லப்படுகின்ற காரணங்கள் முழுக்க முழுக்க சோம்பேறித்தனத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் பொழுது, அந்த இடத்திலே இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது மிகவும் சிறப்பாக இருக்கும்.
தமிழில் தள்ளிப்போடுதல் என்ற அர்த்தத்தில் இந்த PROCRASTINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
He always likes to procrastinate doing his duties.
அவர் எப்போதுமே அவரது கடமைகளைச் செய்வதைத் தள்ளிப்போட விரும்புகிறார்.
Whenever she was given work, she procrastinated it.
எப்பொழுதெல்லாம் அவளுக்கு வேலை கொடுக்கப்பட்டதோ, அப்போதெல்லாம் அவள் அதைத் தள்ளிப் போட்டாள்.
Practice it
எனவே நண்பர்களே! தள்ளிப்போடுதல் அப்படிங்ற இடத்தில இந்த PROCRASTINATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக