Know the word SARCASTIC...

Word of the day is SARCASTIC...
Pronunciation
/sɑːrˈkæs.tɪk/

Function
The word SARCASTIC is an adjective.

Meaning
It means expressing or expressive of ridicule that wounds என்று சொல்லலாம் அதாவது காயப்படுத்தும் நோக்கம் கொண்ட கேலியான வார்த்தைகள் அல்லது வெளிப்பாடுகள் என்று அர்த்தம்.

அதாவது நம்முடைய எண்ணங்களையோ அல்லது பேச்சுக்களையோ அல்லது செயல்களையோ எல்லா நேரத்திலும் எல்லாருக்கும் பிடிக்காது என்பதுதான் உண்மை. அது நம்மீது கொண்ட பொறாமையினால் இருக்கலாம் அல்லது நம்மீது கொண்ட வெறுப்பினால் இருக்கலாம். 

இவ்வாறாக நம்மீது கொண்ட இந்த பொறாமையினால் அல்லது வெறுப்பினால் நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுதோ அல்லது நாம் ஏதாவதொரு நல்ல காரியம் செய்யும் பொழுதோ நம்மை காயப்படுத்த அல்லது கஷ்டப்படுத்த முயற்சி செய்வார்கள். 

இந்த முயற்சியின் வெளிப்பாடாக நம்மை கேலி செய்ய அல்லது கிண்டல் செய்ய அல்லது நக்கல் செய்ய முயற்சி செய்வார்கள். சில நேரங்களில் நம்மை உயர்த்தி பேசுவது போல் தாழ்த்தி பேசுவார்கள்.

இவ்வாறாக நம்மை காயப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உயர்த்திப் பேசுவது போல தாழ்த்தி பேசுவதும் அல்லது இரண்டு மூன்று பேருடன் இணைந்து நம்மை கேலி செய்யும் பொழுது அல்லது கிண்டல் செய்யும் பொழுது அல்லது எள்ளி நகையாடும் பொழுது இந்த SARCASTIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

தமிழில் கேலியான, கிண்டலான, நக்கலான அல்லது வசைபாங்குடைய போன்ற அர்த்தங்களில் இந்த SARCASTIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
He is good at making sarcastic comments.
அவர் கிண்டலான கருத்துக்களை கூறுவதில் வல்லவர்.

When he gave a sarcastic smile, everybody got annoyed. 
அவர் கிண்டலாக சிரித்த பொழுது எல்லோருமே எரிச்சலடைந்தனர். 

Practice it.
இவ்வாறாக தமிழில் கேலியான, கிண்டலான, நக்கலான அல்லது வசைபாங்குடைய போன்ற அர்த்தங்களில் இந்த SARCASTIC என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...