Know the word SYMPATHY...

Word of the day is SYMPATHY...
Pronunciation
/ˈsɪm.pə.θi/

Function
The word SYMPATHY is a noun.

Meaning
The word SYMPATHY refers to the expression of understanding and care for someone else's suffering என்று சொல்லலாம் அதாவது மற்றவரின் துன்பத்தைப் புரிந்து அவர்மீது அக்கறை கொள்வதின் வெளிப்பாடு என்று அர்த்தம்.

அதாவது ஒருவர் கஷ்டப்படும் பொழுது  அவரது அந்த கஷ்டத்தை புரிந்து கொண்டு அவர் மீது அக்கறை கொள்வதன் வெளிப்பாடாக நாம் செய்யும் இரக்க செயல்கள் மற்றும் உதவிகளை இந்த SYMPATHY என்ற இந்த வார்த்தை குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக நண்பரொருவர் அவரது நெருக்கமான உறவினர் ஒருவரை இழந்து சோகத்தில் இருக்கும் பொழுது அந்த சோகத்தை தனிக்க நாம் அனுப்புகின்ற உதவிகள் அல்லது ஆறுதல் வார்த்தைகள் அல்லது குறுஞ்செய்திகள் இந்த SYMPATHY என்ற இந்த வார்த்தையை குறிக்கிறது.

இவ்வாறாக தமிழில் இந்த SYMPATHY என்ற இந்த வார்த்தையை பரிவு, அனுதாபம், இரக்கம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்

In a sentence
The letters of sympathy that she received consoled her so much.
அவளுக்கு கிடைத்த அனுதாபக் கடிதங்கள் அவளுக்கு மிகவும் ஆறுதல் அளித்தன.

He won the election out of votes of sympathy.
அவர் அனுதாப வாக்குகளால் தேர்தலில் வெற்றி பெற்றார்.

Practice it
எனவே நண்பர்களே! பரிவு, அனுதாபம், இரக்கம் அப்படிங்ற இடத்தில இந்த SYMPATHY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...