Know the word THRIVE...

Word of the day is THRIVE...
Pronunciation
/θrɑɪv/

Function
The word THRIVE is a verb.

Meaning
to grow, develop, or be successful அதாவது வளருதல், விருத்தியடைதல் அல்லது வெற்றியடைதல் என்று அர்த்தம்.

அதாவது THRIVE என்ற இந்த வார்த்தையை ஒரு குழந்தை அதிவேகமாக உடல் பெலன் பெற்று செழித்து வளரும் பொழுது பயன்படுத்தலாம். 

அதைப்போல ஒரு மரமோ அல்லது ஒரு செடியோ நன்றாக, வேகமாக செழித்து வளர்ந்து காய்களை கனிகளை வழங்கும் பொழுது பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு குறிப்பிட்ட விலங்கினமானது அதிக அளவில் விருத்தியடைந்து பெரிய அளவில் எண்ணிக்கையில் பெருகும் பொழுதும் பயன்படுத்தலாம்.

மேலும் ஒரு மனிதன் தான் செய்யும் ஒரு செயலில் ; அது வணிகமாக இருக்கலாம் அல்லது ஒரு வேலையாக இருக்கலாம் அதிலே மிகப்பெரிய வெற்றியை அடையும் பொழுதும் THRIVE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் தமிழில் செழித்தல்  அல்லது செழித்தோங்குதல் என்ற அர்த்தத்தில் இந்த THRIVE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The company started to thrive after the presence of new manager.
புதிய மேலாளரின் வருகைக்குப் பிறகு நிறுவனம் செழிக்கத் தொடங்கியது.

These plants thrive during the rainy season.
இந்த செடிகள் மழைக்காலத்தில் செழித்து வளரும்.

Practice it
எனவே நண்பர்களே! செழித்தல்  அல்லது செழித்தோங்குதல் அப்படிங்ற இடத்தில் இந்த THRIVE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...