Know the word TRIAL...
Word of the day is TRIAL...
/traɪəl/
Function
The word TRIAL is a noun.
Meaning
இந்த TRIAL என்ற இந்த வார்த்தையை நான்கு அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
முதலாவதாக TRIAL என்ற இந்த வார்த்தையை சட்டபூர்வமாக பயன்படுத்தலாம். அந்த இடத்தில் It means the determination of a person's innocence or guilt by due process of law அதாவது ஒரு நபர் குற்றமற்றவரா அல்லது குற்றமுள்ளவரா என சட்டத்தின் மூலமாக தீர்மானித்தல் என்று அர்த்தம்.
இந்த அர்த்தத்தில் இந்த TRIAL என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தும்போது தமிழில் விசாரணை என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.
In a sentence
She is on trial for receiving bribe.
அவர் லஞ்சம் பெற்ற குற்றத்தில் விசாரணையில் உள்ளார்.
Meaning
இரண்டாவதாக it refers to the act of testing something என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றை சோதிக்கும் செயல் என்று அர்த்தம்.
அதாவது ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக சோதனைக்குட்படுத்தி அந்த பொருளோ அல்லது அந்த நபரோ எந்த அளவுக்கு பயனுள்ளது அல்லது எந்த அளவுக்கு தேவைக்கு தகுந்தது என்று கண்டறியும் பொழுது அந்த இடத்தில் இந்த TRIAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இந்த அர்த்தத்தில் இந்த TRIAL என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தும்போது தமிழில் சோதனை என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.
In a sentence
Every medicine should undergo a trial before it comes to the public usage.
ஒவ்வொரு மருந்தும் பொது பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
Meaning
மூன்றாவதாக it refers to a person or thing that is annoying and causes a lot of problems என்று சொல்லலாம் அதாவது எரிச்சல் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்துகின்ற ஒரு நபரையோ அல்லது ஒரு பொருளையோ குறிக்கிறது என்று அர்த்தம்.
அதாவது நாம் தமிழில் சில நேரங்களில் பயன்படுத்துவோம் "இவனோடு ஒரே சோதனையாக இருக்கிறது" என்று. அதாவது இவனோடு ஒரே பிரச்சினையாக இருக்கிறது என்று அர்த்தம்.
இவ்வாறாக ஒரு பொருளோ அல்லது ஒரு மனிதனோ பிரச்சினைக்குரியவனாக இருக்கும்போது அந்த இடத்திலே இந்த வார்த்தையை பிரச்சனை என்ற அர்த்தத்தில் தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் பயன்படுத்தலாம்.
In a sentence
He has been a real trial for his parents.
அவன் அவனது பெற்றோருக்கு ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறான்.
Meaning
நான்காவதாக it refers to an exam taken at school for practice before a real exam அதாவது ஒரு உண்மையான தேர்வுக்கு முன் பயிற்சிக்காக பள்ளியில் எடுக்கப்படுகின்ற தேர்வு என்று அர்த்தம்.
இந்த அர்த்தத்தில் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுகிறது. நாமும் பயன்படுத்தலாம் சிறப்பாக இருக்கும்.
இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும்பொழுது தமிழில் சோதனை தேர்வு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
In a sentence
The teacher conducted some trials for the students.
ஆசிரியர் மாணவர்களுக்கு சில சோதனை தேர்வுகளை நடத்தினார்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் விசாரணை, சோதனை, பிரச்சனை மற்றும் சோதனை தேர்வு என்ற அர்த்தங்களில் இந்த TRIAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக