Know the word TURMOIL...

Word of the day is TURMOIL...
Pronunciation
/ˈtɝː.mɔɪl/

Function
The word TURMOIL is a noun.

Meaning
it means a state of confusion, uncertainty, or disorder என்று சொல்லலாம் அதாவது குழப்பம், உறுதியற்றதன்மை அல்லது சீர்குலைவு நிறைந்த ஒரு நிலை என்று அர்த்தம்.

அதாவது வாழ்க்கையில் பிரச்சனை, குழப்பம், உறுதியற்றதன்மை போன்றவையெல்லாம் அவ்வபோது வந்து வந்து போகும். அவ்வாறாக வந்து சென்றால்தான் சந்தோஷம், மனநிம்மதி, அமைதி போன்றவை என்ன என்று தெரியும் அதை அனுபவிக்கும் பொழுது திருப்தியாகவும் இருக்கும்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு இடத்தில் எல்லா பிரச்சனைகளும், எல்லா குளறுபடிகளும் ஒரே நேரத்தில் வந்து நிற்கும் பொழுது அந்த சூழ்நிலை சமாளிப்பதற்கு மிகவும் கடினமானதாகிவிடும். பொறுப்பில் இருப்பவர்களின் மனநிலை கொதிக்கிற தண்ணீர் போல கொந்தளிக்க ஆரம்பித்துவிடும்.

இவ்வாறாக ஒரு சூழ்நிலை குழப்பம் நிறைந்ததாக, சமாளிக்க முடியாததாக என்ன நடக்குமோ என அறிய முடியாததாக இருக்கும் பொழுது இந்த TURMOIL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பயங்கரமான குழப்பம் அல்லது பயங்கரமான கலக்கம் அல்லது பயங்கரமான இடர்பாடு என்ற அர்த்தங்களில் TURMOIL என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தலாம்

In a sentence
During the time of Corona the whole world was in turmoil.
கொரோனா காலத்தில் உலகம் முழுவதுமே பயங்கரமான கலக்கத்தில் இருந்தது.

At present the country is in a state of political turmoil.
தற்போது நாட்டில் அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் பயங்கரமான குழப்பம் அல்லது பயங்கரமான கலக்கம் அல்லது பயங்கரமான இடர்பாடு என்ற அர்த்தங்களில் இந்த TURMOIL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...