Know the word TYPO...

Word of the day is TYPO...
Pronunciation
/ˈtaɪ.poʊ/

Function
The word TYPO is a noun.

Meaning
a small mistake in a printed text என்று சொல்லலாம் அதாவது அச்சிடப்பட்ட உரையில் ஏற்பட்டுள்ள ஒரு சிறிய எழுத்துப் பிழை என்று அர்த்தம்.

அதாவது இந்த TYPO என்ற இந்த வார்த்தையானது TYPOGRAPHICAL ERROR என்ற நீளமான வார்த்தையினுடைய சுருங்கிய வடிவம் ஆகும்.

அதாவது கம்ப்யூட்டர் கொண்டோ அல்லது டைப்ரைட்டர் கொண்டோ அல்லது சாதாரணமாக மொபைலிலோ ஏதேனும் எழுதும்பொழுது அதிலே தவறுதலாக ஏற்படுகின்ற எழுத்துப்பிழைகளை இந்த TYPO என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

பொதுவாக ஒரு கட்டுரை எழுதும்பொழுதோ அல்லது ஒரு புத்தகம் எழுதும்பொழுதோ அதனை அச்சிட்டு பிறருடைய பயன்பாட்டிற்கு வெளியிடுவதற்கு முன்னால் அதிலே இருக்கும் எழுத்துப் பிழைகளை திருத்துவதற்கு PROOF READING செய்வார்கள். இவ்வாறாக PROOF READING செய்யும்போது கண்டுபிடிக்கப்படும் அந்த எழுத்துப்பிழைகளை TYPOS  என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி பன்மையில் அழைக்கலாம்.

சில நேரங்களில் PROOF READING முடிந்த பின்பும் சில எழுத்துப் பிழைகளுடன் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளியாகிவிடும் அவற்றையும் இந்த TYPO என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி அழைக்கலாம்.

எனவே தமிழில் எழுத்துப் பிழை அல்லது அச்சுப் பிழை என்ற அர்த்தங்களில் TYPO என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
I found a typo in the newly released book.
புதிதாக வெளிவந்த புத்தகத்தில் ஒரு எழுத்துப் பிழை இருப்பதைக் கண்டேன்.

Usually he makes lot of typos when he writes.
பொதுவாக அவர் எழுதும் போது நிறைய எழுத்துப் பிழைகளை விடுவார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் எழுத்துப் பிழை என்ற அர்த்தத்தில் இந்த TYPO என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...