Know the word YEARN...

Word of the day is YEARN...
Pronunciation
/jɜrn/

Function
The word YEARN is a verb.

Meaning
to desire something strongly, esp. something difficult or impossible to obtain அதாவது பெற முடியாத அல்லது பெறுவதற்கு கடினமான ஒன்றை பெற அதிகமாக ஆர்வம் காட்டுவது என்று அர்த்தம்.

அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை என்று ஒன்று உண்டு என்று தான் சொல்ல வேண்டும் அதுதான் உண்மையும் கூட. அப்படித்தானே? ஆசை என்று ஒன்று இல்லாத மனிதனை பார்க்க வாய்ப்பில்லை என்று கூறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்த பட்சம் ஒரு சின்ன ஆசையாவது இருக்கும் மேலும் அந்த ஆசையானது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் என்றும் சொல்லலாம்.

மனிதனின் இந்த ஆசைகள் காலப்போக்கில் காலத்தால் நிறைவேறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது அல்லது நிறைவேறாமல் வெறும் ஆசையாகவே இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. 

இவ்வாறாக பல நாட்களாக பல வருடங்களாக நிறைவேறாத ஒரு ஆசை ஏக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதுதான் உண்மை. 

இவ்வாறாக பல நாட்களாக பல வருடங்களாக நிறைவேறாத ஒரு ஆசைக்காக ஏங்கும் ஒரு இடத்தில் இந்த YEARN என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மேலும் நிறைவேறிய ஒரு ஆசை மீண்டும் நடைபெறுவதற்காகவும் ஒரு மனிதன் ஏங்கலாம் அந்த இடத்திலும் இந்த YEARN என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் தமிழில் ஏங்குதல் என்னுமிடத்தில இந்த YEARN என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
She yearns to live with her family.
அவள் அவளது குடும்பத்துடன் வாழ ஏங்குகிறாள்.

India yearns to win the World Cup one more time.
இன்னும் ஒரு முறை உலகக் கோப்பையை வெல்ல இந்தியா ஏங்குகிறது.

Practice it
எனவே நண்பர்களே! ஏங்குதல் அப்படிங்ற இடத்தில இந்த YEARN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...