Know the phrase FED UP...

Word of the day is FED UP...
Pronunciation
/ˌfed ˈʌp/

FED UP என்ற இந்த வார்த்தையை வார்த்தை என்று சொல்ல கூடாது மாறாக PHRASE என்று அழைக்க வேண்டும் அதாவது சொற்றொடர் என்று அர்த்தம் ஏனென்றால் இதிலே இரண்டு வார்த்தைகள் அடங்கி இருக்கிறது.

Function
The phrase FED UP is an adjective.

Meaning
It means bored, annoyed, or disappointed, especially by something that one has experienced for too long என்று சொல்லலாம் அதாவது ஒருவர் நீண்ட காலமாக அனுபவித்த ஒரு விஷயத்தால் ஏற்படும் சலிப்பு, எரிச்சல் அல்லது ஏமாற்றம் என்று அர்த்தம்.

அதாவது சில விஷயங்கள் எத்தனை முறை பார்த்தாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாது ஆனால் அதே நேரத்தில் சில விஷயங்கள் ஒருமுறை கூட பார்க்கவோ கேட்கவோ முடியாத அளவுக்கு இருக்கும்.

எடுத்துக்காட்டாக சில படங்கள் (சில கதைகள் அல்லது சில ஜோக்குகள்) எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கும் மனதுக்கு இனிதாக இருக்கும்,  பரவசமூட்டுவதாக இருக்கும் ஆனால் அதே நேரத்தில் சில படங்கள் ஒரு முறை தான் பார்க்க முடியும். அதிலும் சிறந்த விதமாக சில படங்கள் ஒரு முறை கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் அந்த மாதிரி நேரங்களில் இடைவேளையோடு திரும்பி வீட்டுக்கு வந்தவர்களும் இருப்பார்கள்.

இவ்வாறாக ஒரு விஷயம் சலிப்பு தட்டும் பொழுது அல்லது எரிச்சலூட்டுவதாக அமையும் பொழுது அல்லது ஏமாற்றத்தை தருவதாக அமையும் பொழுது அந்த இடத்திலே இந்த FED UP என்ற இந்த சொற்றொடரை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வெறுப்பு அல்லது சலிப்பு என்ற அர்த்தத்தில்  FED UP என்ற இந்த சொற்றொடரை தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
I am fed up with his jokes.
அவருடைய நகைச்சுவைகள் எனக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றன.

I am fed up with him because he is so petty.
அவன் மிகவும் சின்னத்தனமாக இருப்பதால் அவன் மீது எனக்கு வெறுப்பு உண்டாகிறது.

Practice it.
எனவே நண்பர்களே! இந்த FED UP என்ற இந்த சொற்றொடரை தமிழில் வெறுப்பு அல்லது சலிப்பு என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...