Know the word BOASTFUL...

Word of the day is BOASTFUL...
Pronunciation
/ˈbəʊst.fəl/

Function
The word BOASTFUL is an adjective.

Meaning
The word BOASTFUL means exhibiting self-importance என்று சொல்லலாம் அதாவது சுய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்ற என்று அர்த்தம்.

அதாவது ஒரு நபர் தனது சாதனைகளைப் பற்றியோ அல்லது தனது திறமைகளை பற்றியோ அல்லது தான் வைத்திருக்கின்ற பொருட்களை பற்றியோ அல்லது அவரது குணங்களைப் பற்றியோ அல்லது அவரது அழகைப் பற்றியோ அல்லது அவர் செய்த வீர தீர செயல்களை பற்றியோ அல்லது அவர் பிறருக்கு செய்த உதவிகளைப் பற்றியோ அவர் பேச ஆரம்பித்த நேரத்திலிருந்து அந்தப் பேச்சை முடிக்க கூட முடியாத அளவுக்கு பேசிக்கொண்டே இருக்கும் பொழுது அந்த நபரை இந்த BOASTFUL என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.

அதே நேரத்தில் ஒருவர் பிறரை ஊக்கப்படுத்துவதற்காக தான் செய்த சாதனைகளை அல்லது வீர தீர செயல்களை அல்லது தான் செய்த உதவிகளை பற்றி பேசலாம். அதற்கு மாறாக ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னை பற்றியே முடிவே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவரை இந்த BOASTFUL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம்.

எனவே தமிழில் தற்பெருமையுடைய அல்லது தற்புகழ்ச்சியுடைய என்னும் அர்த்தத்தில் இந்த BOASTFUL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். 

In a sentence
Nobody likes to talk with him because he is boastful always.
அவர் எப்பொழுதும் தற்புகழ்ச்சியுடையவராக இருப்பதால் யாரும் அவருடன் பேச விரும்புவதில்லை.

If she is not boastful, many people will like her.
அவள் தற்பெருமையுடையவராக இல்லாவிட்டால், பலருக்கு அவளை பிடிக்கும்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த BOASTFUL என்ற இந்த வார்த்தையை தமிழில் தற்பெருமையுடைய அல்லது தற்புகழ்ச்சியுடைய என்ற அர்த்தங்களில்  பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...