Know the word COMPLY...

Word of the day is COMPLY...
Pronunciation
/kəmˈplɑɪ/

Function
The word COMPLY is a verb.

Meaning
It means to act according to an order, rule, or request என்று சொல்லலாம் அதாவது ஒரு உத்தரவு, விதி அல்லது ஒரு கோரிக்கையின்படி செயல்படுதல் என்று அர்த்தம்.

அதாவது நாம ஒரு நிறுவனத்துல வேலை செய்யும் பொழுது அந்த நிறுவனத்திற்கென்று சில சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இருக்கும் எனவே அந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் அந்த நிறுவனத்திலே நாம் பணி புரிய முடியும். 

அதைப்போலவே நாம ஒரு இடத்திலே வசிக்கும் பொழுது அந்த இடத்திற்கென்று சில சட்ட திட்டங்கள் இருக்கும் மேலும் அந்த இடத்தின் உரிமையாளர் சில சட்ட திட்டங்களை நமக்கு கொடுத்திருப்பார் எனவே அதற்குட்பட்டு, அதற்கு கீழ்படிந்து தான் அந்த இடத்திலே வசிக்க முடியும். 
 
அதைப் போலவே ஒரு குடும்பம் என்று வரும் பொழுது அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் அங்கே இருப்பார்கள். 

இவ்வாறாக நாம்  வேலை செய்கின்ற இடத்தில் அல்லது வசிக்கின்ற இடத்தில் நமக்கென்று கொடுக்கப்பட்டுள்ள அந்த சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை ஏற்று வாழும் பொழுது அந்த இடத்திலே இந்த COMPLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

இன்னொரு விதமாக சொல்ல வேண்டுமென்றால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நிறைவேற்றுதல் என்கிற அர்த்தத்திலும் COMPLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

எனவே தமிழில் இந்த COMPLY என்ற இந்த வார்த்தையை இணங்குதல் அல்லது இசைதல் அல்லது நிறைவேற்றுதல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
If you refuse to comply with the rules, you will get penalty. 
நீ விதிகளுக்கு இணங்க மறுத்தால், உனக்கு அபராதம் விதிக்கப்படும்.

I am happy that he complied with my instructions.
எனது அறிவுறுத்தல்களை அவர் நிறைவேற்றியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Practice it
எனவே நண்பர்களே! இணங்குதல் அல்லது இசைதல் அல்லது நிறைவேற்றுதல் அப்படிங்ற இடத்தில இந்த COMPLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...