Know the word CONCENTRATION...

Word of the day is CONCENTRATION...
Pronunciation
/ˌkɑːn.sənˈtreɪ.ʃən/

Function
The word CONCENTRATION is a noun.

CONCENTRATION என்ற இந்த வார்த்தையானது நமக்கு எல்லோருக்கும் நன்கு தெரிந்த மேலும் நாம் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஒரு வார்த்தை அதே நேரத்தில் இந்த வார்த்தையை பற்றி தெரியாத சில அர்த்தங்களும் இருக்கின்றன எனவே இந்த CONCENTRATION என்ற இந்த வார்த்தையை பற்றி தெரிந்த அர்த்தத்தையும் தெரியாத அர்த்தத்தையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

Meaning
முதலாவதாக It refers to complete attention என்று சொல்லலாம் அதாவது முழு கவனம் என்று அர்த்தம்.

அதாவது ஒருவர் தான் செய்கின்ற ஒரு செயலில் முழு கவனத்தையும் கொடுத்து எந்தவித கவன சிதறலுக்கும் இடம் கொடுக்காமல் அந்த செயலை செய்தல் என்று அர்த்தம்.

இதனை ஒரு மனிதனின் தனித்திறமை என்றும் சொல்லலாம் ஏனென்றால் எல்லோராலும் இவ்வாறாக செயல்பட முடியாது அதே நேரத்தில் ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தும் அது மாறுபடும். 

எனவே இந்த அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தும் போது ஒருமுகப்படுத்துதல் அல்லது முழு கவனம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
Due to noise from outside I lost concentration.
வெளியிலிருந்து வரும் சத்தம் காரணமாக நான் கவனத்தை இழந்தேன்.

Meaning
இரண்டாவதாக it refers to a large number or amount of something in the same place என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்று பெரிய எண்ணிக்கையில் அல்லது பெரிய அளவில் ஓரிடத்தில் இருத்தல் என்று அர்த்தம். 

அதாவது ஒரு பொருளோ அல்லது ஒரு பறவையோ அல்லது ஒரு விலங்கினமோ அல்லது மக்களோ ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த CONCENTRATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

எடுத்துக்காட்டாக நாம் சில நேரங்களில் பயன்படுத்துவோம் போலீசை குவித்து போட்டிருக்கிறார்கள் என்று சொல்லுவோம் அதனை CONCENTRATION OF POLICEMEN என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். 

மேலும் இரண்டாம் உலகப் போரின் போது CONCENTRATION CAMP என்று பயன்படுத்தினார்கள் அங்கே போர் கைதிகள் ஒரு சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

இவ்வாறாக இந்த CONCENTRATION என்ற இந்த வார்த்தையை இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் குவித்தல் அல்லது குவிக்கப்படுதல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
There is a concentration of policemen at the city entrance.
நகர நுழைவு வாயிலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Meaning
மூன்றாவதாக இந்த CONCENTRATION என்ற இந்த வார்த்தையானது வேதியலில் பயன்படுத்தப்படுகிறது அந்த இடத்தில் it refers to the strength of a solution என்று சொல்லலாம் அதாவது ஒரு கரைசலின் செறிவு அல்லது அடர்த்தி என்று அர்த்தம்.

அதாவது ஒரு கரைசலில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரைபொருளின் அடர்த்தி என்று அர்த்தம்.

வேதியியலிலிருந்து சின்ன ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால் சோடியம் ஹைட்ராக்சைடு என்ற ஒரு கரைபொருளை நீர் என்ற ஒரு கரைப்பானால் கரைக்கும் பொழுது நமக்கு நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடு என்ற கரைசல் கிடைக்கும்.  இவ்வாறு கிடைக்கும் இந்த நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடில் இருக்கும் சோடியம் ஹைட்ராக்சைடின் செரிவை அல்லது அடர்த்தியை இந்த CONCENTRATION என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் இந்த CONCENTRATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் செறிவு அல்லது அடர்த்தி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
Find the concentration of sodium hydroxide in the given solution.
கொடுக்கப்பட்ட கரைசலில் உள்ள சோடியம் ஹைட்ராக்சைட்டின் செறிவைக் கண்டறியவும்.

Practice it.
எனவே நண்பர்களே! இந்த CONCENTRATION என்ற இந்த வார்த்தையை தமிழில் ஒருமுகப்படுத்துதல் அல்லது முழு கவனம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்கள் மேலும் குவித்தல் அல்லது குவிக்கப்படுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்கள் மேலும் செறிவு அல்லது அடர்த்தி என்ற அர்த்தத்திலும் பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...