Know the word CONDENSE...
Word of the day is CONDENSE...
/kənˈdens/
Function
The word CONDENSE is a verb.
CONDENSE என்ற இந்த வார்த்தையை சுருக்குதல், குறைத்தல், அகற்றுதல் அல்லது மாற்றுதல் என்று வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
Meaning
முதலாவதாக It means to reduce something, such as a speech or piece of writing, in length என்று சொல்லலாம் அதாவது நீளமாக இருக்கும் ஒரு பேச்சையோ அல்லது எழுத்தையோ சுருக்குதல் என்று அர்த்தம்.
அதாவது ஒரு மணி நேரம் பேச வேண்டும் என்று எழுதி வைத்திருந்த ஒரு உரையை 10 நிமிடத்திற்குள் பேச வேண்டும் என்று வரும் பொழுது அந்த மிக நீளமான உரையை 10 நிமிடத்திற்குள் பேசுவதற்கு ஏற்றார் போல் சுருக்குவது என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
மேலும் இதே போலவே அதிகமாக இருக்கும் ஒரு பொருளின் எண்ணிக்கையை குறைத்தல் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம். அதாவது ஒருவரிடம் உடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பொழுது அதிலே தேவையற்றதை குறைத்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
In a sentence
I have asked him to condense his ten page of writing into one page.
அவருடைய பத்துப் பக்க எழுத்தை ஒரு பக்கமாக சுருக்கும்படி நான் அவரிடம் கேட்டிருக்கிறேன்.
I have to condense the number of my dresses.
நான் எனது ஆடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
இரண்டாவதாக to remove water from a liquid so as to make it thicker என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது ஒரு திரவத்திலிருந்து தண்ணீரை அகற்றி அதனை தடிமனாக்குதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே இந்த MILKMAID என்று ஒரு வகை உணவு உண்டு. அந்த MILKMAID ஆனது இந்த வகையில்தான் தயாரிக்கப்படுகிறது அதாவது பாலில் இருக்கும் நீரானது குறைந்தபட்சமாக 60% ஆவது நீக்கப்பட்டு அதனுடன் இனிப்பு கலந்து இந்த MILKMAID தயாரிக்கப்படுகிறது. இவ்வாறாக பாலிலிருந்து நீரானது அகற்றப்படும் பொழுது அந்தப் பாலானது CONDENSED MILK என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறாக ஒரு திரவத்திலிருந்து நீரானது அகற்றப்படும் பொழுது அந்த இடத்தில் இந்த CONDENSE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The milk is condensed to make condensed milk.
நீர் அகற்றப்பட்ட பால் தயாரிக்க பாலிலிருந்து நீர் அகற்றப்படுகிறது.
மூன்றாவதாக to cause a gas or vapor to change into a liquid என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது ஒரு வாயு அல்லது நீராவியை திரவமாக மாற்றுதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த நீராவியையோ அல்லது வாயு நிலையில் இருக்கும் ஒரு பொருளையோ திரவமாக மாற்றுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக நாம் குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்கும் பொழுது அந்த வெந்நீரானது ஆவியாக மாறுவதை நாம் காண முடியும் இவ்வாறாக ஆவியாக மாறிய அந்த நீரானது மீண்டும் குளிர்ந்த காற்றில் பட்டு திரவமாக மாறி குளியலறையில் உள்ள சுவற்றில் மற்றும் கண்ணாடியில் பனி போல படரும். இவ்வாறாக வாயு நிலையில் இருக்கும் ஒரு பொருளானது திரவ நிலைக்கு மாறும் பொழுது அந்த இடத்தில் இந்த CONDENSE என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The cold air condenses the steam into fog.
குளிர்ந்த காற்று நீராவியை பனிப்படலமாக மாற்றுகிறது.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் சுருக்குதல், குறைத்தல், அகற்றுதல் அல்லது மாற்றுதல் போன்ற இடங்களில் இந்த CONDENSE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக