Know the word CONSENSUS...

Word of the day is CONSENSUS...
Pronunciation
/kənˈsen.səs/

Function
The word CONSENSUS is a noun.

Meaning
The word CONSENSUS refers to a generally accepted opinion or decision among a group of people என்று சொல்லலாம் அதாவது ஒரு குழுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து அல்லது முடிவு என்று அர்த்தம்.

பொதுவாக ஒரு நிர்வாகம் என்று வரும் பொழுது அந்த நிர்வாகத்தில் புதிதாக நடக்கவிருக்கின்ற ஒரு நிகழ்வை குறித்தோ அல்லது கடந்த கால நிகழ்வை குறித்தோ ஒரு முக்கியமான முடிவு என்று ஒன்று எடுக்கும் பொழுது அந்த நிர்வாகத்தை சார்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து அந்த முடிவை எடுப்பது தான் வழக்கம். 

இவ்வாறாக ஒரு முடிவு எடுக்கும் பொழுது அங்கே கருத்து மோதல்கள் வருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதிலும் சிறந்த விதமாக அறிவாளிகள் மற்றும் அனுபவத்தில் சிறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிற இடத்தில் கருத்து மோதல்கள் அதிகமாகவே இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது ஆனால் அதே நேரத்தில் கருத்து மோதல்கள் நிறைய இருந்தாலும் முடிவு சிறந்த முடிவாக இருக்க வாய்ப்பும் இருக்கிறது.

இவ்வாறாக பல கருத்துக்களை கேட்டதற்கு பின்பு ஒரு குழுவாக அல்லது ஒரு நிர்வாகமாக எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வரும்பொழுது அந்த முடிவை இந்த CONSENSUS என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.

சில நேரங்களில் ஒரு ஒருமித்த கருத்துக்கு  நிர்வாகத்தால் வர முடியாமல்  போவதற்கான வாய்ப்பும் இருக்கிறது அந்த நேரத்திலே நிர்வாகமானது ஓட்டெடுப்பு செய்து முடிவுக்கு வரும். 

இவ்வாறாக ஒரு குழுவாக சேர்ந்து எடுக்கின்ற ஒரு முடிவானது எப்பொழுதுமே ஒரு நிர்வாகத்துக்கு சாதகமாக,  ஒரு பக்க பலமாக இருக்குமே தவிர அது பாதகமாக இருப்பதற்கான வாய்ப்பில்லை என்று சொல்லலாம்.

எனவே தமிழில் ஒருமித்த கருத்து அல்லது பொதுவான சம்மதம் என்னும் அர்த்தத்தில் இந்த CONSENSUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். 

In a sentence
We are unable to reach a consensus and so we shall go for voting.
நம்மால் ஒரு ஒருமித்த கருத்துக்கு வர முடியவில்லை, எனவே நாம் ஓட்டெடுத்து முடிவுக்கு வருவோம்.

The hotel management is trying to reach a consensus for constructing a swimming pool. 
நீச்சல் குளம் அமைக்க ஹோட்டல் நிர்வாகமானது ஒருமித்த கருத்தை எட்ட முயற்சிக்கிறது.

Practice it
எனவே நண்பர்களே! இந்த CONSENSUS என்ற இந்த வார்த்தையை தமிழில் ஒருமித்த கருத்து அல்லது பொதுவான சம்மதம் என்ற அர்த்தத்தில்  பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...