Know the word CRITTER...
Word of the day is CRITTER...
/ˈkrɪt̬.ɚ/
Function
The word CRITTER is a noun.
Meaning
The word critter refers to a creature especially an animal என்று சொல்லலாம் அதாவது ஒரு உயிரினம் குறிப்பாக ஒரு விலங்கு என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே இன்று CRITTER என்ற இந்த வார்த்தையானது CREATURE என்ற வார்த்தையில் இருந்து உருவான ஒரு வார்த்தையாகும் அதாவது உயிரினம் என்று அர்த்தம்.
அதாவது இந்த CRITTER என்ற இந்த வார்த்தையை எல்லா வகையான உயிரினத்தையும் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தலாம் அது விலங்காக இருக்கலாம் அல்லது பறவையாக இருக்கலாம் அல்லது மனிதனாக கூட இருக்கலாம் ஏனென்றால் மனிதனும் ஒரு விலங்கு தானே! இருந்தபோதிலும் அதிகப்படியாக இந்த CRITTER என்ற இந்த வார்த்தையானது ஒரு விலங்கை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த விலங்கானது பெரிய வகை விலங்கிலிருந்து சிறிய வகை பூச்சி வரை இருக்கலாம். மேலும் காட்டு விலங்குகள் மற்றும் வீட்டு விலங்குகள் என எல்லா வகையான விலங்குகளையும் இந்தக் CRITTER என்ற இந்த வார்த்தையானது உள்ளடக்கி இருக்கிறது.
எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் உயிரினம் அல்லது விலங்கு என்கிற அர்த்தத்தில் இந்த CRITTER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
You can see various kinds of critters in the zoo.
மிருகக்காட்சிசாலையில் பல்வேறு வகையான உயிரினங்களை நீங்கள் காணலாம்.
The report says that some kind of a wild critter entered into the village.
கிராமத்திற்குள் ஒரு வகையான காட்டு விலங்கு நுழைந்ததாக அறிக்கை கூறுகிறது.
Practice it
எனவே நண்பர்களே! உயிரினம் அல்லது விலங்கு என்கிற அர்த்தத்தில் இந்த CRITTER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக