Know the word CROOKED...

Word of the day is CROOKED...
Pronunciation
/ˈkrʊk.ɪd/

Function
The word CROOKED is an adjective.

CROOKED என்ற இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம். 

Meaning
முதலாவதாக It means not forming a straight line, or having many bends என்று சொல்லலாம் அதாவது நேர்கோடாக இல்லாத அல்லது பல வளைவுகள் கொண்ட என்று அர்த்தம்.

அதாவது ஒரு பொருள் நேராக இல்லாமல் வளைந்து இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த CROOKED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக நேராக இருக்க வேண்டிய ஒரு கோடானது வளைந்து நெளிந்து இருக்கும் பொழுது அந்த இடத்திலே CROOKED LINE  என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

அதைப்போலவே அதிகமான வளைவுகளை கொண்ட ஒரு சாலையை குறிக்க CROOKED ROAD என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே நேராக இருக்க வேண்டிய பற்கள் வளைந்து குறுக்கு நெடுக்காக இருக்கும் பொழுது அந்த இடத்திலே CROOKED TEETH என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் நேராக இருக்க வேண்டிய ஒரு பொருளானது வளைந்து நெளிந்து இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த CROOKED என்று இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

தமிழில் வளைந்து நெளிந்த அல்லது கோணலான என்ற அர்த்தங்களில் இந்த CROOKED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
It is safe to drive slowly on these crooked roads. 
இந்த வளைந்த சாலைகளில் மெதுவாக ஓட்டுவது பாதுகாப்பானது.

Meaning
இரண்டாவதாக it means dishonest என்று சொல்லலாம் அதாவது நேர்மையற்ற என்று அர்த்தம்.

அதாவது ஒரு நபர் நேரான வழியில் நேர்மையான முறையில் பணம் (பதவி) சம்பாதிக்காமல் குறுக்கு வழியில் வஞ்சகமான முறையில் நாணயமற்ற முறையில் பிறரை ஏமாற்றி பணம் (பதவி) சம்பாதிக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த CROOKED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இந்த அர்த்தத்தில் CROOKED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் பொழுது தமிழில் நேர்மையற்ற,  நாணயமற்ற, வஞ்சகமான, ஏமாற்றக்கூடிய போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம். 

In a sentence
This money was earned in a crooked way. 
இந்த பணமானது நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கப்பட்டது.

Practice it.
எனவே நண்பர்களே! இந்த CROOKED என்ற இந்த வார்த்தையை தமிழில் வளைந்து நெளிந்த அல்லது கோணலான என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க மேலும் நேர்மையற்ற, நாணயமற்ற, வஞ்சகமான, ஏமாற்றக்கூடிய போன்ற அர்த்தங்களிலும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...