Know the word DECIPHER...
Word of the day is DECIPHER...
/dɪˈsaɪ.fɚ/
Function
The word DECIPHER is a verb.
Meaning
It means to discover the meaning of something written badly or in a difficult or hidden way என்று சொல்லலாம் அதாவது மோசமாக அல்லது கடினமான அல்லது மறைமுக வழியில் எழுதப்பட்ட ஒன்றின் பொருளைக் கண்டறிதல் என்று அர்த்தம்.
அதாவது மருத்துவர்கள் மருந்து பரிந்துரைக்கிற சீட்ல எழுதி இருக்கிற அந்த மருந்துகளின் பெயர்களை சாதாரணமாக நம்மால் வாசித்து புரிந்து கொள்ள முடியாது ஆனால் அதே நேரத்தில் மருந்து கடையில் இருக்கிற ஒருவரால் அதனை வாசித்து புரிந்து கொள்ள முடியும்.
அதைப்போலவே ஒரு நாடானது சில ரகசிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது அந்தத் தகவலானது பிறரால் எளிதில் வாசித்து புரிந்து கொள்ளும் வகையில் இருக்காது மாறாக ரகசிய முறையில் எழுதி இருக்கும். அதனை அந்த குழுவைச் சார்ந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.
அதேபோலவே ஒரு அச்சிடப்பட்ட தகவலில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லாத பொழுது அதிலே என்ன அச்சிடப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும் எடுத்துக்காட்டாக இந்த ELECTRICITY BILL ஐ பார்த்தால் உங்களுக்கு புரியும். நிறைய நேரங்களில் இந்த ELECTRICITY BILL இவ்வாறு வாசித்து புரிந்து கொள்ள முடியாத அளவில் தான் இருக்கும்.
இவ்வாறாக ஒருவர் எழுதியிருக்கும் எழுத்துக்களோ அல்லது அச்சிடப்பட்டிருக்கும் ஒரு தகவலோ மோசமான கையெழுத்து கொண்டதாக, தெளிவாக தெரியாததாக, இரகசிய குறிப்புகளால் எழுதப்பட்டதாக இருக்கும் பொழுது அந்த எழுத்துக்களின் பொருளை புரிந்து கொள்ள முயற்சி செய்கிற இடத்தில் இந்த DECIPHER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் புரிந்து கொள்ளுதல் என்கிற அர்த்தத்தில் இந்த DECIPHER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
I am just trying to decipher what is written in the book.
நான் புத்தகத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
You can't decipher what I have written.
நான் எழுதியதை உன்னால் புரிந்துகொள்ள முடியாது.
Practice it
எனவே நண்பர்களே! புரிந்து கொள்ளுதல் என்கிற அர்த்தத்தில் இந்த DECIPHER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக