Know the word DEFER...

Word of the day is DEFER...
Pronunciation
/dɪˈfɝː/

Function
The word DEFER is a verb. 

DEFER என்ற இந்த வார்த்தையானது இரண்டு அர்த்தங்களை கொண்டுள்ளது.

Meaning
முதலாவதாக It means to delay something until a later time என்று சொல்லலாம் அதாவது ஏதாவது ஒன்றை பின் நேரத்திற்கு தாமதப்படுத்துதல் என்று அர்த்தம்.

அதாவது ஏதாவது ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டோ அல்லது காரணமே இல்லாமலேயோ ஒருவர் செய்ய வேண்டிய ஒரு வேலையையோ அல்லது ஒரு செயலையோ சிறிது காலத்திற்கு தாமதித்தல் என்கிற இடத்தில் இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே இந்த அர்த்தத்தில் இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தபொழுது தமிழில் தாமதப்படுத்துதல் அல்லது தள்ளி போடுதல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக The word defer means to yield to another's wish or opinion என்று சொல்லலாம் அதாவது மற்றொருவரின் விருப்பம் அல்லது கருத்துக்கு அடிபணிதல் என்று அர்த்தம்.

அதாவது நாம் ஒரு இடத்தில் வேலை செய்கிறோம் என்றால் அந்த இடத்திற்கு என்று சில விதிமுறைகள் இருக்கும் எனவே அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நாம் செயல்பட முடியும் எனவே அந்த இடத்திலே இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

அதைபோலவே சிலர் அன்பிற்கு அடிபணிபவர்களாக இருப்பார்கள் அதாவது அவர்களது அன்பிற்குரியவர்கள் என்ன சொன்னாலும் அதற்கு அடிபணிவார்கள் அதனை உடனே செய்வார்கள் எனவே அந்த இடத்திலும் இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே சிலர் பதவிக்கு அடிபணிபவர்களாக இருப்பார்கள் அதாவது பதவியில் இருப்பவர்கள் என்ன சொன்னாலும் அதனை உடனே செய்வார்கள் அந்த இடத்திலும் இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

இந்த அர்த்தத்தில் இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தபொழுது தமிழில் அடிபணிதல் அல்லது இணங்குதல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

எனவே தமிழில் தாமதப்படுத்துதல் அல்லது தள்ளி போடுதல் என்கிற அர்த்தத்தில் இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் மேலும் அடிபணிதல் அல்லது இணங்குதல் என்கிற அர்த்தத்திலும் இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
Let's defer the meeting until everybody arrives.
எல்லாரும் வரும் வரை கூட்டத்தை தள்ளிப்போடுவோம்.

He defers to whatever his wife says.
அவர் அவரது மனைவி என்ன சொன்னாலும் அதற்கு அடிபணிவார்.

You must defer to the rules and regulations of the government.
நீங்கள் அரசாங்கத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அடிபணிய வேண்டும்.

Practice it
எனவே நண்பர்களே! தாமதப்படுத்துதல் அல்லது தள்ளி போடுதல் என்கிற அர்த்தத்தில் இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க மேலும் அடிபணிதல் அல்லது இணங்குதல் என்கிற அர்த்தத்திலும் இந்த DEFER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...