Know the word DISAPPROVAL...

Word of the day is DISAPPROVAL...
Pronunciation
/ˌdɪs.əˈpruː.vəl/

Function
The word DISAPPROVAL is a noun.

Meaning
It refers to the feeling of having a negative opinion of someone or something என்று சொல்லலாம் அதாவது யாராவதொருவரின் அல்லது ஏதாவதொன்றின் எதிர்மறையான கருத்தை கொண்ட உணர்வு என்று அர்த்தம்.

அதாவது இந்த DISAPPROVAL என்ற இந்த வார்த்தையை ஒருவர் மற்றொருவரின் கருத்தையோ அல்லது அவர் செய்த செயலையோ தவறு என்று உணர்ந்தவராய் அந்த கருத்தையோ அல்லது அவர் செய்த அந்த செயலையோ விரும்பாத பொழுது அல்லது ஏற்றுக் கொள்ளாத பொழுது அந்த இடத்தில் DISAPPROVAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதேபோலவே ஒரு இயந்திரமானது அதனுள் கொடுக்கப்பட்ட உள்ளீடை தவறு என்று கருதி அந்த உள்ளீடை ஏற்றுக்கொள்ளாத பொழுதும் DISAPPROVAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு ATM இயந்திரத்தில் ஒரு ATM கார்டை உள்ளீடு செய்யும் பொழுது அந்த கார்டானது தவறாக உள்ளீடு செய்யப்பட்டிருக்கும் பொழுது அந்த கார்டை அந்த ATM இயந்திரமானது ஏற்றுக் கொள்ளாது எனவே அந்த இடத்தில் DISAPPROVAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு விஷயமானது தவறு என்று நம்மை பொறுத்தவரையில் தோன்றும் பொழுது அதனை ஏற்றுக் கொள்ளாத நிலை வரும் பொழுது அந்த இடத்தில் DISAPPROVAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மறுத்தல் அல்லது ஒப்புதல் அளிக்க மறுத்தல் அல்லது ஏற்க மறுத்தல் போன்ற அர்த்தங்களில் DISAPPROVAL என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
I did not get the money and so I sensed a disapproval by the machine.
நான் பணத்தை பெறவில்லை அதனால் இயந்திரம் ஏற்க மறுப்பதாக  நான் உணர்ந்தேன்.

The science teacher gave a disapproval for my science project.
அறிவியல் ஆசிரியர் எனது அறிவியல் செயல் திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த DISAPPROVAL என்ற இந்த வார்த்தையை மறுத்தல் அல்லது ஒப்புதல் அளிக்க மறுத்தல் அல்லது ஏற்க மறுத்தல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...