Know the word DISSEMINATE...
Word of the day is DISSEMINATE...
/dɪˈsem.ə.neɪt/
Function
The word DISSEMINATE is a verb.
Meaning
It means to spread something widely என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்றை பரவலாக பரப்புதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த DISSEMINATE என்ற இந்த வார்த்தையை ஒரு விவசாயி வயல்வெளியில் விதையை பரப்பி வீசுவது போல, ஒரு மீனவன் கடலில் வலையை பரப்பி வீசுவது போல ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை அல்லது ஒரு விஷயத்தை பரவலாக பரப்பி எல்லோருக்கும் தெரியப்படுத்துதல் அல்லது எல்லோரும் அறியும் படி செய்தல் என்கிற இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
அந்த செய்தியானது, அந்த தகவலானது அல்லது அந்த விஷயமானது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.
மொத்தத்தில் ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை அல்லது ஒரு விஷயத்தை அல்லது ஒரு கருத்தை நான்கு பேர் அறியும்படி செய்தல் என்கிற இடத்தில் இந்த DISSEMINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் பரப்புதல் அல்லது பரவச் செய்தல் என்ற அர்த்தத்தில் DISSEMINATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
In a sentence
It is important to disseminate the consequences of the disease.
நோயின் விளைவுகளைப் பரப்புவது முக்கியமாகும்.
He is good at disseminating rumors.
வதந்திகளைப் பரப்புவதில் அவர் வல்லவர்.
Practice it
எனவே நண்பர்களே! இந்த DISSEMINATE என்ற இந்த வார்த்தையை பரப்புதல் அல்லது பரவச் செய்தல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக