Know the word FRUCTIFY...

Word of the day is FRUCTIFY...
Pronunciation
/ˈfrʌk.tɪ.faɪ/

Function
The word FRUCTIFY is a verb.

Meaning
It means to produce a good or useful result என்று சொல்லலாம் அதாவது ஒரு நல்ல அல்லது பயனுள்ள முடிவை உருவாக்குதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த FRUCTIFY என்கிற இந்த வார்த்தையை ஒரு மரமானது நன்றாக வளர்ந்து காய்த்து கனி கொடுக்கக்கூடிய காலத்திலே அதிக அளவில் கனிகளை ஈனும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.

அதேபோலவே ஒரு மனிதன் செய்த ஒரு முதலீடோ அல்லது செய்த ஒரு செயலோ தகுந்த காலத்தில் பயன் அளிக்கும் பொழுது அந்த இடத்திலும் இந்த FRUCTIFY என்கிற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் கனி கொடுத்தல் அல்லது பலனளித்தல் என்கிற அர்த்தத்தில் இந்த FRUCTIFY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
Mango trees fructified abundantly this year.
இந்த ஆண்டு மா மரங்கள் அதிகளவில் கனிகள் ஈன்றன.

I hope that the investments which I made fructify soon.
நான் செய்த முதலீடுகள் விரைவில் பலனளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

Practice it
எனவே நண்பர்களே! கனி கொடுத்தல் அல்லது பலனளித்தல் என்கிற அர்த்தத்தில் இந்த FRUCTIFY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...