Know the word GRAVITY...

Word of the day is GRAVITY...
Pronunciation
/ˈɡræv.ə.t̬i/

Function
The word GRAVITY can be used as noun and verb.

Today we celebrate Teachers Day so I wish all the teachers, "A Happy Teacher's Day."

இந்த GRAVITY என்ற இந்த வார்த்தையை ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய ஒரு மிக முக்கியமான ஒரு நற்பண்பாக சொல்லலாம்... வாங்க பார்ப்போம்...

Meaning
இந்த GRAVITY என்ற இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.

முதலாவதாக it refers to the gravitational attraction of the mass of the earth, the moon, or a planet for bodies at or near its surface என்று சொல்லலாம் அதாவது பூமியோ சந்திரனோ அல்லது ஒரு கோளோ அதற்கு மேலே உள்ள அல்லது அதற்கு அருகாமையில் உள்ள பொருட்களை ஈர்க்கக்கூடிய ஈர்ப்புசக்தி என்று அர்த்தம்.

அதாவது இந்த GRAVITY என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் அறிவியலில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது கோள்களின் ஈர்ப்பு விசையை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு கோளும் அதனை சுற்றி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஈர்ப்பு விசையை பெற்றிருக்கிறது எனவே அந்த சுற்றளவிற்குள் வரும் ஒரு பொருளை அந்த கோளானது தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும். இதனை நாம் தமிழில் ஈர்ப்பு விசை என்று அழைக்கிறோம்.

இவ்வாறாக ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு குறிப்பிட்ட அளவிலாவது ஈர்ப்பு விசையை பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லலாம் அப்பொழுதுதான் அவர்களால் தங்களுடைய மாணவர்களை எளிதாக ஈர்க்க முடியும்.

மேலும் கோள்கள் அதனுடைய ஈர்ப்பு விசைக்குள் வரும் எந்த பொருளையும் தன்னகத்தை ஈர்த்துக் கொள்ளும் அது நல்ல பொருள் அல்லது கெட்ட பொருள் அல்லது தேவையான பொருள் அல்லது தேவையில்லாத பொருள் என்று பார்க்காமல் அதனுடைய ஈர்ப்பு விசைக்குள் வரும் எந்த பொருளையும் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும். அதைப் போலவே ஆசிரியர்களும் தன்னிடம் வரும் மாணவர்களை அவர்களது நிறை குறைகளுடன் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு கல்வி புகட்ட வேண்டும்.

இரண்டாவதாக இந்த GRAVITY என்ற இந்த வார்த்தையை seriousness என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் அதாவது an earnest and sincere feeling என்று சொல்லலாம் அதாவது ஒரு தீவிரமான மற்றும் நேர்மையான உணர்வு என்று அர்த்தம்.

அதாவது ஒரு ஆசிரியர் தனது வேலையை அல்லது கடமையை செய்யும் பொழுது அதனை தீவிரத்தன்மையுடனும் நேர்மையான உணர்வுடனும் செய்ய வேண்டும் அவ்வாறு செய்யும் பொழுது அவரால் தனது மாணவர்களை தன்னகத்தே ஈர்க்க முடியும் மேலும் தனது மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ முடியும் என்றும் சொல்லலாம்.

எனவே நண்பர்களே! இந்த GRAVITY என்ற இந்த வார்த்தையை தமிழில் ஈர்ப்பு விசை என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் மேலும் தீவிரத் தன்மை அல்லது தீவிரம் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம்.

In a sentence
Nothing can escape the gravity of the earth.
பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து எதுவும் தப்ப முடியாது.

If you know the gravity of the problem, you will not speak like this.
பிரச்சனையின் தீவிரம் உனக்கு தெரிந்தால், நீ இப்படி பேச மாட்டாய்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் GRAVITY என்ற இந்த வார்த்தையை ஈர்ப்பு விசை என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்க மேலும் தீவிரத் தன்மை அல்லது தீவிரம் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...