Know the word TO in detail...

KNOW THE PREPOSITION TO...
நண்பர்களே! இந்த பதிவிலே
preposition TO பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம். 

கீழ்காணும் ஐந்து முக்கியமான இடங்களில் preposition TO ஆனது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

1. ஒரு நபர் ஒரு இடத்தை நோக்கி அல்லது ஒரு நபரை நோக்கி செல்லும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

2. ஒரு பொருள் ஒரு நபருக்கு அனுப்பி வைக்கப்படும் பொழுது மற்றும் கொடுக்கப்படும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

3. ஒரு செயல் உச்சவரம்பை எட்டும் பொழுது அங்கே பயன்படுத்தப்படுகிறது.

4. உறவை குறிப்பதற்கு          பயன்படுத்தப்படுகிறது அந்த உறவானது இரு நபர்களுக்கு இடையே உள்ள உறவாக இருக்கலாம் அல்லது ஒரு நபருக்கும் ஒரு பொருளுக்கும் இடையே உள்ள உறவாக இருக்கலாம்.

5. நேரத்தை குறிப்பிடுவதில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கூறியவற்றை எடுத்துக்காட்டுடன் பார்க்கும் பொழுது உங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

முதலாவதாக ஒரு நபர் ஒரு இடத்தை நோக்கி அல்லது ஒரு நபரை நோக்கி செல்லும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

Keyword  :   க்கு & இடம்

எடுத்துக்காட்டு : 1
I am going to school. 
நான் பள்ளிக்கு செல்கிறேன்.

விளக்கம்  :
ஒரு நபர் (நான்) ஒரு இடத்தை (பள்ளி) நோக்கி செல்லும் பொழுது அங்கு TO என்ற preposition ஐ நாம் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : 2
Tell Raja to go to Rajesh.
ராஜாவை ராஜேஷிடம் செல்ல சொல்லுங்கள்.

விளக்கம்  :
ஒரு நபர் (Raja) ஒரு நபரை (Rajesh) நோக்கி நகரும் பொழுது அங்கு TO என்ற preposition ஐ நாம் பயன்படுத்த வேண்டும்.

மேலும் மேற்கூறிய எடுத்துக்காட்டுகளின் வாயிலாக தமிழில் "க்கு & இடம்" போன்ற வார்த்தைகள் வரும் பொழுது அங்கு TO என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வருவதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

எனவே TO என்ற இந்த PREPOSITION ஆனது தமிழில் "க்கு & இடம்" என்ற அர்த்தத்தை பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.

இரண்டாவதாக ஒரு பொருள் ஒரு நபருக்கு அனுப்பி வைக்கப்படும் பொழுது மற்றும் கொடுக்கப்படும் பொழுது அங்கே TO பயன்படுத்தப்படுகிறது.

Keyword  :   க்கு  & இடம்

எடுத்துக்காட்டு : 3
 
Please send the parcel to Raja 
தயவு செய்து ராஜாவுக்கு பார்சலை அனுப்பவும்

விளக்கம்:

ஒரு பொருள் (parcel) ஒரு நபருக்கு (Raja) அனுப்பி வைக்கப்படும் பொழுது 
அங்கு TO என்ற preposition - ஐ நாம் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : 4

Kindly give this mobile to Rajesh.
தயவு செய்து இந்த மொபைலை ராஜேஷிடம் கொடுங்கள்.

விளக்கம்:

ஒரு பொருள் (mobile) ஒரு நபருக்கு (Rajesh) கொடுக்கப்படும் பொழுது 
அங்கு TO என்ற preposition - ஐ நாம் பயன்படுத்த வேண்டும்.

3. ஒரு செயல் உச்சவரம்பை எட்டும் பொழுது அங்கே TO பயன்படுத்தப்படுகிறது.

Keyword  :  வரை 

எடுத்துக்காட்டு : 5

The water has come up to the brim.
தண்ணீர் விளிம்பு வரை வந்து விட்டது.

எடுத்துக்காட்டு : 6

He climbed up to the top of the building.
அவர் கட்டிடத்தின் உச்சிவரை ஏறினார்.

4. உறவை குறிப்பதற்கு TO பயன்படுத்தப்படுகிறது. (இரு நபர்களுக்கு இடையே உள்ள உறவாக இருக்கலாம் அல்லது ஒரு நபருக்கும் ஒரு பொருளுக்கும் இடையே உள்ள உறவாக இருக்கலாம்)

எடுத்துக்காட்டு  : 7

This mobile is very important to my friend.
இந்த மொபைல் எனது நண்பருக்கு மிகவும் முக்கியமானது.

விளக்கம் :

ஒரு நபருக்கும் (நண்பர்) ஒரு பொருளுக்கும் (மொபைல்) இடையே உள்ள உறவை குறப்பதற்கு நாம் 
TO  என்ற preposition - ஐ பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு  : 8

Raja is very important to Rani.
ராணிக்கு ராஜா மிகவும் முக்கியமானவர்.

எடுத்துக்காட்டு  : 9

My mom is very important to me 
எனது அம்மா எனக்கு மிகவும் முக்கியமானவர்.

விளக்கம் :

இரு நபர்களுக்கு(Raja & Rani) இடையே உள்ள உறவை குறிப்பதற்கு  
TO  என்ற preposition - ஐ நாம் பயன்படுத்த வேண்டும்.

5. நேரத்தை குறிப்பிடுவதில் TO பயன்படுத்தப்படுகிறது.

Keyword : ஆக 

எடுத்துக்காட்டு  : 10

The time is 10 to 5.
மணியானது 5 ஆக 10 நிமிடம் இருக்கிறது.

எடுத்துக்காட்டு  : 11

We have meeting at quarter to 9.
8 : 45 க்கு நமக்கு கூட்டம் இருக்கிறது.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலமாக  PREPOSITION "TO" பற்றி விரிவாக தெரிந்து கொண்டோம். தொடர்ந்து ஒவ்வொரு PREPOSITIONS களையும் தெளிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...