Know the word HAUGHTY...

Word of the day is HAUGHTY...
Pronunciation
/ˈhɑː.t̬i/

Function
The word HAUGHTY is an adjective.

Meaning
It means unreasonably proud and unfriendly என்று சொல்லலாம் அதாவது காரணமே இல்லாம பெருமைப்படுதல் மற்றும் நட்பற்ற முறையில் நடத்தல் என்று அர்த்தம்.

அதாவது ஒரு நபர் காரணமே இல்லாம தன்னை குறித்து ரொம்ப பெருமைப்படுகிறார் அல்லது பிறரோடு சாதாரணமாகவே நட்பா பழக முடியவில்லை என்றால் அதுக்கு காரணம் அவர் தன்னை பிறரை விட மிகவும் சிறந்தவராக கருதுவது தான் என்று சொல்லலாம்.

இவ்வாறாக தன்னை பிறரை விட மிகவும் சிறந்தவராக கருதும் ஒருவரை இந்த HAUGHTY என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.

மேலும் சொல்ல வேண்டுமென்றால் இந்த HAUGHTY குணம்  படைத்தவர்களை குணம் அற்றவர்கள் என்றே சொல்லிவிடலாம் ஏனென்றால் இவர்கள் எப்பொழுதும் தன்னைப் பற்றிய பெருமையாக பேசிக் கொண்டிருப்பார்கள் மற்றவர்களை தன்னைவிட தாழ்ந்தவராகவே சித்தரித்துக் கொண்டிருப்பார்கள். 

எனவே தமிழில் ஆணவம் அல்லது கர்வம் அல்லது அகந்தை போன்ற அர்த்தங்களில் இந்த HAUGHTY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He acted in a haughty manner that nobody liked him. 
யாருக்கும் பிடிக்காத அளவுக்கு அவர் ஆணவமாக நடந்து கொண்டார்.

As you suffer a lot, your haughty manner will disappear. 
நீ மிகவும் துன்பப்பட துன்பப்பட உனது அகந்தை குணம் மறைந்து விடும்.

Practice it.
எனவே நண்பர்களே! இந்த HAUGHTY என்ற இந்த வார்த்தையை தமிழில் ஆணவம் அல்லது கர்வம் அல்லது அகந்தை போன்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...