Know the word LEGIBLY...

Word of the day is LEGIBLY...
Pronunciation
/ˈledʒ.ə.bli/

Function
The word LEGIBLY is an adverb.

Meaning
The word LEGIBLY means in a way that can be read easily என்று சொல்லலாம் அதாவது எளிதாக படிக்கக்கூடிய வகையில் என்று அர்த்தம்.

அதாவது ஒருவர் எழுதக்கூடிய  எழுத்தானது பிறரால் எளிதாக வாசிக்கக் கூடியதாக மேலும் வாசித்து புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் அவ்வாறாக ஒருவரது கையெழுத்து பிறரால் வாசித்து புரிந்து கொள்ள முடிகிற அளவில் இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த LEGIBLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
 
இந்த LEGIBLY என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் ஒருவரது கையெழுத்தை குறிக்கதான் பயன்படுத்தப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் அச்சிடப்பட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகளை குறிக்கவும் LEGIBLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் எளிதாக படிக்கக்கூடிய வகையில் அல்லது தெளிவாக வாசிக்கக்கூடிய வகையில் என்னும் அர்த்தத்தில் இந்த LEGIBLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
If he does not write legibly, he will not score high marks.
அவர் தெளிவாக வாசிக்கக்கூடிய வகையில் எழுதவில்லை என்றால், அவர் அதிக மதிப்பெண்கள் எடுக்க மாட்டார்.

She has written everything legibly.
அவள் எல்லாவற்றையும் எளிதாக படிக்கக்கூடிய வகையில் எழுதியிருக்கிறாள்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த LEGIBLY என்ற இந்த வார்த்தையை தமிழில் எளிதாக படிக்கக்கூடிய அல்லது தெளிவாக வாசிக்கக்கூடிய என்ற அர்த்தங்களில்  பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...